உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

மீண்டும் பள்ளி வாழ்வு

இப்பொழுது ஆபிரகாம் “கிராபோர்டு" பள்ளியில் படித்து வருகின்றார். இதுகால், கையெழுத்துத் திறத்தைப் பாராட்டிய ஆசிரியர்கள் பலர்; கட்டுரை வன்மையைப் புகழ்ந்தவர்கள் சிலர்; பேச்சின் பெருமையைப் புரிந்து கொண்டிருந்தவர்கள் ஒரு சிலர்; இவ்வாறாக ஆசிரியர்களின் சீராட்டும் பாராட்டும் ஆபிரகாமை வெகுவாக வழி நடத்திச் சென்றன. தமக்கு நல்லதோர் எதிர்காலம் நாடிவர இருக்கின்றது என்ற நம்பிக்கைச் சுடர்,நாடி நரம்பு களிலெல்லாம் ஓட ஆரம்பித்தது. அந்த எழுச்சியால், தாம் அமெரிக்க நாட்டின் வருங்காலத் தலைவர் என்று தோழர்களிடம் துணிவுடன் கூற ஆரம்பித்தார். அவ்வளவு நம்பிக்கை அப்பொழுதே ஏற்பட்டிருந்தது.

இரவல் புத்தகம்

வீம்ஸ் என்னும் பெரியார் வாசிங்டன் வரலாற்றைச் சிறப்பாக எழுதியிருப்பதாகவும், அது ஜோசியா என்பவரிடம் இருப்பதாகவும் நண்பர்கள் பேசிக் கொண்டனர். இதனைக் கேள்விப்பட்ட லிங்கன் ஜோசியாவைக் கண்டு சில நாட்களில் திருப்பித் தருவதாக வாக்களித்து வாசிங்டன் வரலாற்றை வாங்கிக் கொண்டுவந்தார். லிங்கன் குடியிருந்த இடத்திற்கும் ஜோசியா குடியிருந்த இடத்திற்கும் வண்டி வாகன வாய்ப்புக்கள் இல்லை. இருந்தாலும், ஆபிரகாம் கையில் பணம் இல்லை. நடந்தே போய் வாங்கி வந்தார் - நாற்பத்து நான்கு கல்!

ஒரு தண்டனை

வாசிங்டன் வரலாறு வரி வரியாக வாசிக்கப்பட்டது லிங்கனால் மீண்டும் மீண்டும் படித்தார். மனப்பாடமும் செய்தார். ஒருநாள், வீட்டுச் சுவர்மேல் புத்தகத்தை வைத்து விட்டு வேலைக்குப் போய்விட்டார். அன்றடித்த மழையிலே புத்தகம் நனைந்து பல பக்கங்கள் சேதமாயின. இந்தத் துயரமான நிகழ்ச்சியைத் தாங்க மாட்டாத லிங்கன் ஜோசியாவினிடம் மன்னிப்புக் கேட்டதுடன் அவர் தரும் தண்டனையை அனுபவிக்கவும் ஒப்புக் கொண்டார். ஜோசியாவின் காட்டிலே சில நாட்கள் வேலை செய்யவேண்டும் என்ற தண்டனை லிங்கனுக்குக் கிடைத்தது. ஆயினும் வேலைத் துயரத்தைப் பார்க்கிலும் லிங்கனுக்கு வேறொரு மகிழ்ச்சி இருந்தது. குறிப்பிட்ட வேலையை முடித்துவிட்டுச் சிதைந்த புத்தகத்தை லிங்கனே எடுத்துக் கொள்ளலாம் என்றும், தம்நூலகத்தில் இருந்த