உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணல் ஆபிரகாம்

21

புத்தகங்களில் வேண்டியதை வேலை செய்யும் வரைக்கும் எடுத்துப் படித்துக் கொள்ளலாம் என்றும் ஜோசியா கூறியிருந்தார். ஜோசியாவின் மனைவி உயர் பண்பினர். லிங்கனைப் பிள்ளை போலாகக் கருதி வந்தார். ஓய்ந்திருக்கும் வேளைகளில் லிங்கனை உடனழைத்து வைத்துக் கொண்டு உரை யாடுவார்.

தகுதியுணர்ந்த தாய்

ஒருநாள் லிங்கன் உரத்துச் சத்தம்போட்டுப் பேச, திருவாட்டி ஜோசியா "ஏன் இவ்வளவு கத்திப் பேசுகின்றாய்? என்றார். லிங்கனோ தயங்காது நான் அமெரிக்க நாட்டின் தலைவனாகக் கூடியகாலத்து, பெரும் பெருங் கூட்டங்களிலே பேசவேண்டு மல்லவா! அதற்காக இப்பொழுதிருந்தே தயாரிக்கின்றேன் என்றார்.

"புத்தகம் ஒன்றுக்காகப்புல்வெட்டிக் காடு திருத்தும் இவன் போகப் போகின்றானாம் அமெரிக்கத் தலைவனாக" என்று பொரிந்து வெடிக்க வில்லை, திருவாட்டி ஜோசியா! அதற்குப் பதிலாக ஆபிரகாம் பண்பையும் அறிவையும் அறிந்திருந்த அந்த அம்மையார், தங்களுக்குக் கிடைத்த பெரும் பேற்றையே நினைந்து பெருமிதம் கொண்டார்.

இந்த நிலைமையிலே லிங்கன் படிப்பு நடந்து கொண்டிருந் தாலும் வறுமை ஒருபக்கம் வாட்டிக் கொண்டிருந்தது. தந்தையார் உழைப்பால் மட்டும் பிழைப்பு நடத்த முடியாதென்று அறிந்த பதினாறு வயது லிங்கன் தாமும் உழைப்பிலே புக முன்வந்தார்.