உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணல் ஆபிரகாம்

23

நடந்து கொள்வார். இதனால் வாடிக்கைக்காரருக்கு லிங்கன் மேல் பற்று ஏற்பட்டுக் கொண்டு வந்தது. கடையில் இருந்துகொண்டே லிங்கன் 'பிராங்ளின் சரிதம்,' ஹென்றிகிளேர் வரலாறு, முதலானவற்றைப் படித்துக் கொண்டதுடன் செய்தித் தாளும் படித்து அரசியல் விவகாரங்களைத் தெரியவும் விவாதிக்கவும் திறம் பெற்றார். இதனால் ஜோன்ஸ் கடையிலே வாடிக்கைக்காரர் பெருகிக் கொண்டு வந்தனர். அவர்கள் ஆபிரகாமுடன் விவாதித்து அறிவைப் பெருக்கிக் கொள்ள ஆசைப்பட்டனர். வியாபார நிலையம் விரிவுரை நிலையமாக மாறிவிட்டது.

வியாபார வருமானமும் பெருகி, ஜோன்ஸ் புகழும் பெருகிக் கொண்டு வந்ததால் ஆபிரகாம் காரியத்தில் ஜோன்ஸ் தலையிட வில்லை. அதனாலேதான் கடையிலிருந்து விலகிய பின்னருங் கூடத் தம் நண்பர்களைச் சந்தித்துத் தருக்கம் செய்யும் இடமாக ஜோன்ஸ் மளிகைக் கடையைப் பயன்படுத்தி வந்தார்லிங்கன். *யானையால் யானையைப் பிடித்துக் கொள்ளும் சாதுரியம்போல ஒரு செயலைச் செய்யும் போதே அச் செயலால் மற்றொரு செயலைச் செய்து முடித்துக் கொள்ளும் திறம் லிங்கனிடம் இருந்தது. துவே அவர்வாழ்க்கையின் முன்னேற்றத்திற்குத் தலையாய காரணமாக இருந்தது என்பதற்கு ஐயமில்லை.

காலநிலைக்கேற்ற கட்டுரை

செய்தித்தாள் படித்து வந்த லிங்கனுக்குச் செய்தித் தாளுக்குக் கட்டுரை எழுத வேண்டுமென்ற ஆவல் கிளம்பியது. அதனால் அந்த வட்டாரத்திலே தொற்று நோய் போல் பெருகிக் கிடந்த குடிப்பழக்கத்தை வெறுத்துக் கட்டுரை எழுதத் தொடங்கினார். தம் தாய் நான்ஸி குடியைக் கெட்டபழக்கமாகக் கருதியிருந்தாள் என்பதைத் தெளிவாக அறிந்திருந்த லிங்கன், குடிவழக்கத்தை ஒழிப்பதைப்பற்றி எழுதுவதும் பேசவதும் அன்னைக்குச் செய்யும் காணிக்கையாகக் கருதினார். அதனால் செய்தித் தாளில் குடிப்ப தன் குறைவைத் தெள்ளத் தெளிய எடுத்துக்காட்டினார்.

"மதியை மயக்கி மானத்தைப் போக்கி வரும் குடியைக் கொண்டவர் குடியே கெடும்” என்று எச்சரித்தார். *"பொன்னையும் பொருளையும் அள்ளி வீசி, பேதையையும் புத்தியின்மையையுமா

  • வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்

யானையால் யானையாத் தற்று (குறள் 678)