உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

வாங்கிக் கொள்ள வேண்டும்" என்று அறிவுறுத்தினார். இவர் எழுத்தைப் பாராட்டிக் கூறுவோர் பலர் இருந்த படியால் மக்களுக்கு அரசியலறிவையும் பெருக்கும் ஆர்வம் கொண்டு அரசியல் கட்டுரைகளும் தொடர்ந்து எழுதிவர ஆரம்பித்தார்.

புதிய படகு

இந்தச் சூழலிலேதான் பொருள் வருவாய்க்காகத் தம் கையாலேயே சிறியபடகு ஒன்றைக் கட்டினார்; ஆற்றிலே மிதக்க விட்டார். ஆற்றிலே மிதந்த அந்தச் சின்னஞ் சிறுபடகு மரக்கட்டைப் படகாக லிங்கனுக்குத் தெரியவில்லை. வானக் கடலிலே வாலொளி வீசிச் செல்லும் வெள்ளி யோடமாகக் காட்சிவழங்கியது. அழகுக்காகவோ செய்தார் படகை? அரிக்கும் வறுமை நோயை அழிக்கும் கருவியாக அல்லவா செய்தார்! நெடுநேரம் வரைக்கும் எவரும் தம்படகை நாடி வரவில்லை. இமை கொட்டாது பார்த்துக் கொண்டும் ஏங்கிக் கொண்டும் இருந்தார்.

இரண்டு சீமான்கள் பெட்டியும் சுமையுமாய் ஓடி வந்தனர். அவர்கள் "விரைவாகச் சென்று கப்பலைப் பிடிக்க வேண்டும்! உன்னால் முடியுமா?" என்றனர். முடியும் என்ற தலையசைப்போடு கூலியும் பேசாது படகைச் செலுத்தினார் விடுதலைப்படகு செலுத்த வந்த வெற்றி வீரர்! கப்பல் கிடைத்தது கனவான்களுக்கு! கண்களிலே ஒற்றி ஒற்றிக் களியாட்டம் ஆடும்படி லிங்கனுக்குக் கிடைத்தது ஒரு டாலர்! அப்பப்பா! வாழ்விலே முதல் வருவாய்; பெருத்த வருவாய்! இப்படியேகிடைத்துக் கொண்டிருந் திருந்தால்? அகிலம் அருளாளர் ஒருவரை இழந்திருக்கும்! வாழ்க வறுமை!

"முதல் முதல் சம்பாதித்த அந்த வெண் பொற்காசு தந்த மகிழ்ச்சியை இந்த வெள்ளை மாளிகையால் தரமுடியவில்லை" என்று தலைவரான பின்னும் ஆபிரகாம் கூறிக் கொண்டார் என்றால் அந்தப் பஞ்சை நிலையிலே அவர் பாடிய பாடல்கள் எத்தனையோ?

சட்டப் படிப்பு

எதிர்பாரா முறையில் லிங்கனுக்குச் செல்வர் ஒருவரின் உறவு கிடைத்தது. அவரிடம் சட்டப் புத்தகம் ஒன்று இருப்பதாக

கையறி யாமை யுடைத்தே பொருள்கொடுத்து

மெய்யறி யாமை கொளல். (குறள் 925)