உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணல் ஆபிரகாம்

25

அறிந்தார். லிங்கனுக்கு அன்றிர வெல்லாம் தூக்கம் வரவில்லை. "சட்டப் புத்தகம் திருப்பப் படுகின்றது; மன்றத்திலே வாதம் தொடங்கப் படுகின்றது; பொருளும் புகழும் வானளாவப் பெருகு கின்றது". எல்லாம் எண்ணக் குவியலிலே! சட்டப் புத்தகத்தை வாங்கிப் பார்க்கு முன் ஒவ்வொரு கணமும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது. அசைந்து செல்லும் இவ்விரவு அழிந்து தொலையாதா" என்று அலுத்துக் கொண்டார். விடிந்தது; சட்டப் புத்தகத்திலிருந்து என்றும் அகற்ற முடியாது என்று இறுமாந் திருந்த சில எழுத்துக் களை இருந்த இடம் தெரியாமல் நெடுங் கோடிட்டழிக்க வந்த நீதியாளன் கரங்களிடையே தவழ்கின்றது இரவல் சட்டப் புத்தகம். செல்வருக்கு நன்றி கூறுமுன்னரே சட்டப் புத்தகத்திற்குக்கிடைத்தது முத்தம். இனிப் படகுக்கு என்னவேலை? ஆற்றின் கரையிலே கிடந்தது அது. ஆபிரகாம் சிந்தையும் செயலும் சட்டப் புத்தகத்தின் அடித்தளத்தில் பதிந்து விட்டன.

தணியாத ஆவல்

ஒருநாள் செய்தித்தாள் புரட்டிக் கொண்டு இருந்தார் லிங்கன். அத்தாளிலே இருந்த சில வரிகள் அவரைக் கவர்ந்தன. அவர் இருக்கும் இடத்திற்கு 32 ஆவது கல்லில் ருந்த பூனவல்லியில் ஒரு கொலை வழக்கு விசாரிக்கப்பட இருப்ப தாகவும், அந்நாளில் பெயர் பெற்றிருந்த வழக்கறிஞர் பிரெக்கன்ரிட்ஜ் வாதாடப் போவதாகவும் குறிப்பிடப் பட்டிருந்தது.

"சட்டத்தைப் படித்தால் மட்டும் போதாது; முறையோடு வாதாடுவதையும் அறிய வேண்டும்” என்ற ஆசை உந்தியதால் ஆபிரகாம், மறுநாளே விசாரிக்க இருந்த அந்த வழக்கிற்குக் கால்நடையில் பயணப்பட்டார்.

பிரெக்கன் ரிட்ஜ், கொலைக் குற்றம் சாட்டப்பட்டிருந்த குற்றவாளியைத் தமது வாதத்திறமையால் எப்படி வேறுவிதமாக மாற்றிக் கொண்டு விட்டார் என்ற வியப்புக்கடலிலே நீந்தினார் லிங்கன். ஒவ்வொரு சொல்லையும், அது சொல்லப்பட்ட பாணியையும், அதன் பொருத்தத்தையும் அறிந்த லிங்கன் பிரெக் கனுக்கு நன்றி பாராட்டும்உள்ளத்தோடு நெருங்கி, கைகுலுக்க முயன்றார். அழுக்கு ஆடையும் அசங்கியமும் கொண்டிருந்த ஆபிரகாமை ஏற இறங்க ஒருபார்வை பார்த்து விட்டு அலட்சியமாக நடந்தார் வாதாட்ட வல்லுநர் ஏமாற்றமுற்ற