உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

ஆபிரகாம் "உங்கள் வாதத்திறமையைப் பாராட்டு கின்றேன்" என்று தலை தாழ்த்திக் கூறினார். அந்த ஏழையின் நல்லுரையை ஏற்கக் கூடிய அளவில் அவர் செவி இல்லை! அவ்வளவு தூரம்மரத்துப் போயிருந்தது, அந்த மேதை நீதியாளனின் செவி. ஆபிரகாம் வாதத்தைக் கேட்டுப் பயன் பெற்றார். அதற்கு நன்றி செலுத்தினார். நன்றியுரையை ஏற்றுக் கொள்ளாததைப் பற்றித் தமக்குக் கவலை இல்லை என்று எண்ணிக் கொண்டார்.

நினைவு இருக்கிறதா?

பிரெக்கன் ரிட்ஜை மீண்டும் ஒருமுறை ஆபிரகாம் சந்திக் கின்றார் - வெள்ளை மாளிகையிலே! "இதற்கு முன் என்னை எங்கேனும் சந்தித்ததாக நினைவிருக்கிறதா?" என்ற வினா எழுப்பு கின்றார் லிங்கன். "நினைவில்லை" என்கிறார் நெஞ்சழுத்த நீதிபதி. "நீங்கள் பூனவல்லியில் வாதாடும்போது கேட்டுக் கிறுகிறுத்து நன்றி தெரிவித்தவர்களில் நானும் ஒருவன் நான் முன்னுக்குவரக் காரணமாக இருந்தவர்களுள் தாங்களும் ஒருவர்" என்கின்றார் பதவிப்பெருமை இல்லாத பண்புப் பெருந்தகை! இப்பொழுதாவது அவர் கேட்டுக் கிறுகிறுத் திருக்கத் தானே வேண்டும்!

சொற் போர்க் கழகம்

பூனவல்லி நீதி மன்றத்திலிருந்து புறப்பட்ட லிங்கனுக்குச் "சொற் போர்க் கழகம்" ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது. “காலம் கரை கடந்த வெள்ளம் போல் செல்வது; கருத்தின்றி வீண் பொழுது போக்குபவன் கைக்குக் காலம் எட்டக் கூடியதன்று” என்பதை ஆழ்ந்தறிந் திருந்த ஆபிரகாம் ஊர்போய்ச் சேர்ந்தவுடனே சொற்போர்க் கழகத்தைத் தொடங்கி விட்டார். நண்பர்களிடம் வாதங்களும் எதிர்வாதங்களும் தொடங்கின. அனைவரும் பேச்சத் திறமையை வளர்த்தனர். வாதத்தில் வளர்ந்தனர்! ஆபிரகாம் வழக்கறிஞராக முடியும் என்பதைச் சொற்போர்க் கழகம் தெளிவாக எடுத்துக் காட்டிற்று. ஆயினும் பேச்சில் மட்டும் போய்க் கொண்டிருந்தால் பிழைப்புக்கு வழி? நியூஆர்லியன்சுக்குப் பயணம்

நியூ ஆர்லியன்சில் வியாபார வாடிக்கை வைத்திருந்த உள்ளூர் வணிகர் ஒருவர் ஆபிரகாமை அறிந்திருந்தார். உடல் உரமும் உள்ள ஒழுங்கும் உடைய ஆபிரகாமை வெகுவாக அவருக்குப் பிடித்திருந்தது. லிங்கன் ஏழை யென்றாலும் கூட