உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணல் ஆபிரகாம்

27

அவர் உயர்பண்பிலே ஆட்பட்டவணிகர் நெருங்கிப் பழகினார். தம் குமாரனும் ஆபிரகாமுடன் நெருங்கிப் பழக வாய்ப்புத் தந்தார். லிங்கன் வழியாகத் தம்குமாரனுக்கு அன்பும் அறிவும் சிறப்பாக அமையும் என்ற நம்பிக்கை வணிகருக்கு ஏற்பட்டிருந்தது.

ஒரு சமயம் ஆர்லியன்சிற்கு லிங்கனும் வணிகர் மைந்தனும் சரக்குகளோடு கப்பலில் பயணமாயினர். படகோட்டித் திரிந்த பஞ்சை லிங்கனுக்குக் கடற் பயணம் அளவிறந்த களிப்பூட்டியது. அந்தக் களிப்பிலே சிக்கிக் கூத்தாடாது கப்பல் இயங்கும் முறை, கருவி அமைப்பு ஆகியனவற்றை ஆராய்ந்து கொண்டே போனார். ஒருவாறு தம் மனத்தே கப்பலின் அமைப்பு முறையைப் படமாகப் பிடித்து வைத்துக் கொண்டார்.

கொள்ளைக் கூட்டம்

கப்பலோட்டி கப்பலை ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தினார். அத்துறையிலே போய்த் தங்கள் காரியங்களைக் கவனித்து வர வேண்டிய சிலர் இறங்கிச் சென்றார்கள். அந்நேரம்; கரிய நிறம்; கனத்த உதடு; உப்பிய கன்னம்; ஓங்கார ஒலி; சுருண்ட மயிர்; மிரண்ட விழி இவற்றை யுடைய கொள்ளைக் கூட்ட மொன்று திடுமெனக் கப்பலுக்குள் புகுந்தது.

-

கப்பலோட்டியைத் தாக்கினர் சிலர்; பயணக் காரரைப் பதம் பார்த்தனர் சிலர். ஆற்றலுடையவர் குபீரென எழுந்தனர்; அச்சம் உடையவர் பதுங்கினர்; இரண்டும் கெட்டவர் படபடத்தனர்! ஆபிரகாம் எதிர்ப்பு அணித் தலைமை ஏற்றார். கொள்ளைக் கூட்டம்லிங்கனின் கொடிய தாக்குதலைச் சமாளிக்க முடியாது திணறியது. வெற்றிகரமாகப் பின்வாங்கத் தொடங்கியது கொள்ளைக்கூட்டம்! லிங்கனின் மென்மை யுள்ளத்திலே அமைந்து கிடந்த வன்மையைக் கண்டு ஆச்சரியம் கொண்டான் வணிகர் மைந்தன். "உயிரைக் காத்த உத்தமன்" என்று மற்றவர்கள் புகழ்ந்து கொண்டார்கள்.

அதுவேறு; இதுவேறு

தந்தையின் துப்பாக்கியால் படபடத்து விழுந்த பறவையைக் கண்டு பரிதாபப்பட்ட லிங்கன் “ஆயிரமாயிரம் பேர் அடிமையாக இருப்பதா? அந்தோ கொடுமையே!" என்று கண்ணீர்விட இருந்த லிங்கன் எந்த நீக்ரோவருக்கு விடுதலை தர இருந்தாரோ அவர்களில் சிலரைக் கடலுக்கு இரையாக்கி விட்டார்! "உரிமை

-