உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

வேறு; உருட்டுத்தனம் வேறு;” என்பதை நீக்ரோவர் அறிந்து கொள்ளவேண்டும் என்பதற்குப் பாடம் கற்பித்தார் ஆபிரகாம்.

அனைவரும் ஆர்லியன்சு போய்ச் சேர்ந்தனர். ஆபிரகாம் வணிகக் காரியங்களைக் கவனித்து விட்டு, கடைத் தெரு வழியே ஒரு நாள் மாலைப் பொழுதில் உலாவி வந்தார். அங்கேதான் ஆறாகக் கண்ணீர் வடித்து அடிமைச் சந்தையைக் கண்டார். அன்று ஏற்பட்ட கொதிக்கும் உள்ளத்தின் குறிக்கோளே நீக்ரோ அடிமையர்க்கு விடுதலைதந்ததும், லிங்கனுக்கு அருளாளர் என்ற பெருமை தந்ததும் ஆகும்! தோற்றுவாய் காட்டும் ஏலக்குரல், ஆர்லியன்சு தந்த அவலக் குரல்.

நியூசேலம் செல்லல்

தாமஸ் லிங்கனுக்குத் தம் குடியிருப்பை மாற்றி அமைக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதனால் அவர் இருந்த இடத்திலிருந்து 200 கல்களுக்கு அப்பால் உள்ள நியூ சேலம் செல்ல நினைந்தார். இப்பயணத்திற்குச் சாலைவசதியோ போக்கு வரவு வசதியோ இல்லாத நிலைமையில் இருந்தது. காட்டாறுகள் பல குறுக்கிட்டன. திடீர்த் திடீர் என்று வெள்ளம் வரவும் செய்தது. காட்டாற்று வெள்ளம் ஒன்றைக் கடந்து அனைவரும் எதிர்க்கரை அடைந்தனர். அப்பொழுது வண்டிக்குப் பின்னாக ஓடிவந்த தங்கள் நாய் காணப்பட வில்லை. அது மறுகரையில் நின்று தத்தளித்துக் கொண்டிருந்தது. மீண்டும் வெள்ளத்தில் இறங்கி, மறு கரைக்குப் போய் அந்த நாயைக் கொண்டுவர மற்றவர்கள் விரும்பவில்லை. ஆபிரகாமோ அடியெடுத்து வைக்க ஒரு சிறிதும் மனமில்லாதவராய் ஆற்று வெள்ளத்தைத் தாண்டினார். தம் வருகைக்காக வாலாட்டிக் கொண்டிருந்த நாயைத் தோள்மீது போட்டுக் கொண்டு வண்டிக்குப் போய்ச் சேர்ந்தார்.

நியூ சேலத்தில் ஆபட் என்னும் வணிகர் கடை ஒன்று இருந்தது. அதில் லிங்கனுக்கு வேலை கிடைத்தது. நீக்ரோ வருக்கும் லிங்கனுக்கும் ஏற்பட்ட போராட்டச் செயலைக் கேள்விப் பட்டிருந்த ஆபட், நியூ சேலத்திலே தமக்கும் மற்றவர்களுக்கும் ஓயாத் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த தருக்கர் கூட்டத்திற்கு வகையான பாடம் கற்பிக்க லிங்கனைப் பயன்படுத்திக் கொள்ள எண்ணினார்.அதனால் அத்தருக்கர் கூட்டத்தினிடம் ஆபிரகாமைப் பற்றி ஆபட் ஒரு நாள் எடுத்துக்கூறினார். அவர்களோ