உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணல் ஆபிரகாம்

29

ஆபிரகாமைப் பழித்ததோடு, தங்களுடன் மற்போருக்கு வருமாறும் மார் தட்டி அழைத்தனர்.

வலுச் சண்டைக்கு இழுக்கும் இக்கூட்டத்தை அடக்கிவிட எண்ணிய லிங்கன் காலமும் இடமும் குறித்து, மற்போர் செய்ய முன்வந்தார். தருக்கர் கூட்டத் தலைவன் தளராது போர் செய்தாலும் இறுதி வெற்றி லிங்கனுக்கே இருந்தது. தருக்கர் தலைவன் தலை வணங்கினான்.மான வீரத்திற்கு முன் மண்டியிட்டான். ஆபிரகாம் இவ் வெற்றியிலே இறுமாந்து விடாது தருக்கர் தலைவனையும், தருக்கர்களையும் அன்பினால் அணைத்துக் கொண்டார். இப்பொழுது ஆபிரகாமே அக்கூட்டத்தின் ஒப்புயர்வற்ற தலைவர். தலைவர் ஆபிரகாம்

உத்தரவிடும் தலைவர் ஆபிரகாம்; உடனே முடித்து வைக்கும் தொண்டர்கள் தருக்கர்கள்! குதிரைப் பந்தயமும் சேவற் போரும் நடத்துபவர்கள் தொண்டர்கள். தலைமையாக இருந்து நீதி வழங்குபவர் லிங்கன். இத்தலைமையும், நீதி வழங்கும் செயலும் லிங்கனின் எதிர்கால வாழ்வைத்தெளிவாக எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தன.

லிங்கனுடைய வீரமும் புகழும் நியூ சேலமெல்லாம் பரவியது. தொண்டர்கள் தம் தலைவன் பெருமைக்காக அரும்பாடுபட்டனர். இந்தச் சூழலுக்கிடையேயும் லிங்கன் ஆபட் கடையில் சிப்பந்தியாக இருந்து கொண்டுதான் வந்தார். நேர்மைக்காகப் பாடுபட்டுக் கொண்டுதான் இருந்தார். *சரக்கு வாங்குவோரின் பொருளை அதிகமாக எடுத்துக் கொள்ளாது தாம் கொடுக்க வேண்டிய அளவிலும் குறைத்துக் கொடுக்காது வாணிகச் செம்மையைக் காத்து வந்தார் லிங்கன். வாங்க வேண்டிய அளவினும் எவரிடமேனும் பொருள் அதிகமாகப் பெற்றிருந்தால் மீண்டும் கொண்டுபோய்க் கொடுத்திருக் கின்றார். எவருக் கேனும் கொடுக்க வேண்டிய அளவில் குறைத்துக் கொடுத்திருந்தால் அந்தக் குறைவைத் தாமே போய் நிறைவு செய்து வந்திருக்கிறார். இவ்வளவு காரியங்களிலும் ஆபட் தடையாக இருந்ததில்லை.

"வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்

பிறவும் தமபோற் செயின்'

"கொள்வதூஉம் மிகை கொளாது

கொடுப்பதூஉம் குறைகொடாது

"

(குறள் 120)

(பட்டினப்பாலை)