உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

நீராவிப்படகு செய்தல்

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

நியூ ஆர்லியன்ஸ் கடற் பயணத்தின் போது ஆராய்ந்தறிந்த கப்பலாராய்ச்சியை வைத்து ஆபிரகாம் தாமே நீராவிப் படகொன்றை உண்டாக்கிக் கொண்டார். அந்தப் படகின் மூலம் வருமானம் வரத்தொடங்கியது. அன்பர்கள் பலர் பெருகியதால் அவர் தொழில் வருமானமும் பெருகலாயிற்று.

போர் வீரர்

இந்நிலைமையில்

அமெரிக்காவில் பயங்கரமான போராட்டம் ஒன்று தொடங்கியது. மக்கள் அல்லல் பட்டு ஆற்றாது அலறினார். ஆனால் ஆபிரகாமோ அவர்களுக்கு ஆறுதல் மொழி கூறினார். ஆறுதல் மொழியோடு மட்டும் நில்லாது தம் குழுவினர் அனைவரையும் கூட்டி ஆயுதம் தாங்கச் செய்து அவர்கள் விருப்பத்தின்படி தாமே படைத்தலைமையும் ஏற்றார். வீரர்களுக்கு அரிய பயிற்சி தந்தார். எழுச்சியை ஏற்படுத்தினார். இடை இடையே விகடமும் பேசிக் கொண்டார். ஆபிரகாம் தலைமையில் அமர்ந்து பணியாற்றும் பெருமை கிடைத்தற்காக வீரர்கள் மகிழ்ந்தனர். அச்சமூட்டும் போராட் டத்தைத் துச்சமாக மதித்து மகிழ்ச்சியோடு பொழுது போக்கினர். போராட்டக் கலையில் பேராற்றல் லிங்கனுக்கு இருந்ததால் எத்தகைய பெருஞ்சேதமும் இன்றிச் சமாளித்தார். அதனால், துப்பாக்கியைத் தோளிலே தாங்கிக் கொண்டிருக்கும் பதவி கிடைத்திருந்தாலும் தமக்குச் சுடவேண்டிய சந்தர்ப்பம் ஏற்படாது போனதற்காக லிங்கன் பிற்காலத்தே பெருமகிழ்ச்சி அடைந்திருக் கின்றார்.

நில அளவையாளர்

போர் வெறியகன்று நாட்டில் அமைதி ஏற்பட்டவுடனே நில அளவையாளராகப் (சர்வேயராகப்) பணியாற்றத் தொடங் கினார். வியாபாரத்தில் லிங்கன் கொண்டிருந்த நேர்மைக்கு மதிப்புக் கொடுத்து வந்த மக்கள், நில அளவையிலே அவர் கடைப்பிடித்த செம்மையைக் கண்டு பெரிதும் பாராட்டினர். அதனால்"பொய்மை நீங்கிய புனிதன்" “கள்ளம் அகன்ற கண்ணியன்" என்ற பெருமைகள் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடரலாயின.