உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஞ்சலகத் தலைவர்

அண்ணல் ஆபிரகாம்

31

ஊருக்கு வெளிப்பகுதிகளிலே நிலமளந்து வந்த லிங்கன் வருக்குள்ளே இருந்த அஞ்சலகத் தலைவராக (போஸ்ட் மாஸ்டர்) மாறினார். தம் அறிவைப் பெருக்கிக் கொள்வதற் காகவே வலியக் கிடைத்த வாய்ப்பாக இத்தொழிலைக் கருதிய லிங்கன் தொப்பியையே அஞ்சல் பையாக வைத்துக் கொண்டு நடைபாதை யெல்லாம் படிக்க ஆரம்பித்தார். பத்திரிகைகளில் பலப் பல வகையானவை அவ்வூருக்கு வந்து கொண்டிருந்ததால், அவற்றை யெல்லாம் படிப்பார். படித்த பின்னர்த்தான் கொண்டு போய்ச் சேர்ப்பார்: இதனால் உலகியல் அறிவு உச்சமடைந்தது. அமெரிக்கச் செய்தித் துறையொன்று நியூசேலம் அஞ்சலகத் திலே 6 அடி 4 அங்குல உயரமுடைய ஒரு மனிதரின் மண்டை யோட்டுக்குள்ளே நிறுவனம் செய்யப்பட்டுச் செம்மையாக நடந்து வந்தது என்று சுருங்கக் கூறிவிடலாம். 'நடமாடும் சுவடிச் சாலை'யாம் லிங்கனால்நியூசேல மக்களின் அரசியலறிவு வளர்ந்தது; வளர்த்தார் ஆபிரகாம். மக்கள் ஆதரவும் வளர்ந்தது; ஆபிரகாமும் வளர்ந்தார். அதன் விளைவுதான் லிங்கனைச் சட்ட சபைக்குப் பிடித்துத் தள்ளியது.