உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சட்டசபைத் தேர்வு

4. ஒழுங்குள்ள ஆபே

போர்க்களத்தலைமை ஏற்றபோது லிங்கனது புகழ் நியூசேலத்திற்கு அப்பாலும் படர்ந்திருந்தது. அதனால் போர் முடிந்தவுடனே மக்கள் சட்டசபைத் தேர்தலுக்கு நிற்கும்படி வற்புறுத்தினர். லிங்கனுக்கு அப்பொழுது சட்ட சபைக்கு நிற்க விருப்பமில்லை.ஆயினும் நண்பர்களின் வற்புறுத்தலுக்காகவே நின்றார். அத்தேர்தலில் லிங்கனுக்குத் தோல்வியே கிடைத்தது. அதனால் சோர்வுற்றார். நண்பர்களும் மக்களும் விட்டுவிட வில்லை. மீண்டும் வற்புறுத்தி இல்லினாய்ஸ் பகுதிக்குச் சட்ட சபை உறுப்பினராக நிறுத்தி வைத்தனர். அன்பர்கள் எதிர் பார்த்தது வீண் போகவில்லை. ஆபிரகாம் வெற்றி பெற்றார். சட்டசபை உறுப்பினரான ஆண்டு 1834-லிங்கனின் அப்போதைய வயது 25.

சட்ட சபைக்குச் செல்ல விருந்த லிங்கனுக்குக் கிழிந்த கோட்டும், அழுக்கேறிய உடையும் நைந்தும் நசிந்தும் இருந்த பட்டுத் தொப்பியுமே சொத்தாக இருந்தன. அதனால் இதுவரை உள்ளத்தையும் உணர்வையுமே கவனித்து வந்த லிங்கனுக்கு உடையையும் கவனிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. தலையைக் கோதுவதற்குள்ளாகவும், காலணியைச் சீராக்குவதற் குள்ளாகவும் எவ்வளவோ படித்து விடலாம் என்னும்

கற்பனையுலக லிங்கன் இதனை விரும்பவில்லையாயினும் புத்துடையும், புதுச்சோடும் தேவைப்பட்டன; தேவையைச் சட்டமன்றம் தந்தது; வழிவகையை அது தரவில்லை! பன்முறை தேர்வு

லிங்கன், பழக்கப்பட்டிருந்த நண்பர் ஒருவரிடம் 200 டாலர் கடன் பெற்றுத் தமக்கு வேண்டிய உடைகளையும் உபயோகப் பொருள்களையும் வாங்கிக் கொண்டார். உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் இவை இல்லாதிருந்தால் கூட உள்ளச்