உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணல் ஆபிரகாம்

33

செம்மையும், உரையில் தூய்மையும், உழைப்பில் நேர்மையும் இருந்தால் போதும், தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்னும் மெரிக்காவின் தேர்தல் சிறப்புக்கு ஆபிரகாம் எடுத்துக் காட்டாகத் துலங்கினார். அங்கு, தேர்தலுக்குப் பணம்வேண்டாம்; பதவி வேண்டாம்; வேண்டுவது பண்பு! இது ஆபிரகாமினிடம் அளவிறந்திருந்தது. அதனால் சட்ட மன்ற உறுப்பினராகப் பன்முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.

செயல் வீரர்

சட்ட சபைக்குச் சென்ற தொடக்கத்திலே ஆபிரகாம் அவ்வளவாக எந்த வாதத்திலும் கலந்து கொண்டதாகத் தெரிய வில்லை. சட்ட சபையின் சமாதானத்திற்காகவும் நற்செயலுக் காகவும் பாடுபட்டார். பிணக்குக் கொண்டு இருப்பவர்களை நன்னெறி காட்டி ஒன்று சேர்த்தார். அரசியல் காரியங்களைக் கவனிப்பதற்காக ஏற்பட்ட குழுக்கள் பலவற்றில் உறுப்பினராக அமைந்து செயல் வீரராகப் பணியாற்றினார்.

நல்லார் ஒருவர் துணை

இந்த அளவோடு நிற்க விரும்பாத லிங்கன் வழக்கறிஞர் ஸ்டூவர்ட் என்பவருடைய உறவைத் தேடிக் கொண்டார். ஸ்டூவர்ட் தம்மைப் போல் பிறரும் முன்னேற வேண்டும் என்ற பெருங் குணம் கொண்டவர். அதனால் ஆபிரகாமைச் சந்திக்கக் கூடிய நேரங்களிலெல்லாம் சட்டத்துறை சம்பந்தப்பட்ட நுணுக்கங்கள் பலவற்றை எடுத்துக் கூறியதோடு தம்மிடம் இருந்த சட்டப் புத்தகங்களை லிங்கன் விரும்பும் போதெல்லாம் எடுத்துப் படித்துக் கொள்ள உரிமை தந்தார். ஸ்டூவர்ட் லிங்கனுக்கு உயிர் நண்பராகவும், உயர்ந்த ஆசானாகவும் திகழ்ந்தார். அதனால் சட்டசபை அலுவல் இல்லாத நேரமெல்லாம் சட்டப் படிப்பில் ஈடுபட்டார் லிங்கன். அவர் கனவு வீணாகி விடவில்லை. இதற்குள்ளாக மீண்டும் சட்ட மன்ற உறுப்பினராகத் தேர்ந் தெடுக்கப்பட்டார். ஆயினும் வழக்குத் துறையிலே நாட்டம் மிகுந்திருந்தது. அதன் காரணத்தால் 1837 ஆம் ஆண்டு ஸ்பிரிங் பீல்டு சென்று தம்மை ஒரு வழக்கறிஞராகப் பதிவு செய்து கொண்டார். இப்பொழுது லிங்கனுக்கு இரண்டு பதவிகள். ஒன்று, சட்டமன்ற உறுப்பினர்; இரண்டு வழக்கறிஞர்.