உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணல் ஆபிரகாம்

ஆ! ஆ!! அருள்தான் உருவம்!

35

பன்றியொன்று சேற்றுள் மாட்டிக் கொண்டு திண்டாடியது. காலுறையைக் கழற்றிச் சென்று உதவி செய்ய முடியாதபடி அவசரவேலை இருந்ததால் லிங்கன் பன்றி நின்ற இடத்தினின்று நெடுந்தொலைவு நடந்து சென்றுவிட்டார். அதற்குப் பின்னும் அவர் மனம் விட்டு வைக்கவில்லை.

"அழியப் போகும் உயிரைக் காப்பதினும் என்ன அவசரம் இருக்கமுடியும்" என்று இதயம் இடித்துக் கேட்டது. மீண்டும் திரும்பினார். சோடுகளையும், உறையையும்கழற்றிவிட்டு, சேற்றுள் இறங்கிப் பன்றிக்கு விடுதலை தந்தார். இப்பரிவுடைமையைப் போற்ற முன் வரவில்லை பிற வழக்கறிஞர்கள்! கிண்டலுக்கு மேலுமொரு வாய்ப்புக் கிடைத்து விட்டதாகக் கொக்கரித்தார்கள். இப்படியும் பொறுமையுண்டா?

லிங்கன் ஓரிடத்தே நின்று கொண்டிருந்தார். கையிலே சட்டப் புத்தகம் இருக்கின்றது. சரேலென முன்வந்த ஒருவன் தலைதாழ்த்தி வணங்கிக் கொண்டே, "ஐயா, தங்கள் உடைமை ஒன்று என்னிடம் நெடுங்காலமாக இருக்கின்றது. அதைச் சேர்ப்பிக்கவே வந்தேன்" என்று கத்தி யொன்றை நீட்டினான். லிங்கனும் வாங்கிக் கொண்டே காரணம் கேட்டார். வணக்க மிட்ட அவன், ஒரு பெரியவர் பல ஆண்டுகளுக்கு முன்னாக என்னிடம் இக் கத்தியைத் தந்து நீ பார்ப்பவர்களில் எவன் அசங்கிய மானவனாக இருக்கின்றானோ அவனிடம் இக் கத்தியைக் கொடுத்து விடு என்றார். அதற்கு உரிமைப் பட்டவர்களை இது வரை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. தாங்கள் தாம் கத்தியின் உடைமைக்காரர் என்பதை இப்பொழுது தான் கண்டு பிடித்தேன்" என்று பேசிவிட்டு நடக்க ஆரம்பித்தான்.

கோபப்படுவதற்குப் பதிலாகக் குறுஞ் சிரிப்புச் சிரித்துக் கொண்டே “என் பொருளை இதுவரை காத்துத் தந்ததற்காக நன்றி செலுத்திக் கொள்கின்றேன் என்றார் ஆபிரகாம். இவ்வாறு வண்டியோட்டும் ஒருவனே நையாண்டி பண்ணும் அளவுக்கு லிங்கன் நடையுடை இருந்தது. ஆயினும் வாதத் திறமையிலே சிக்கி வயமிழந்தவர் பலராவர்.

வழக்காடுவதற்கோர் துணைவர்

தம்மைச் சட்டத் துறையில் புகுத்திய ஸ்டூவர்ட் டோடு சேர்ந்து வழக்கு நடத்திக் கொண்டு வந்தார்லிங்கன். ஸ்டூவர்ட்