உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

இல்லாள் விருப்பம்

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

வழக்கறிஞராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது சட்டசபைக்கு 1836 முதல் 1846 முடிய ஆறுமுறை மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுகின்றார். தமக்கு 33 ஆம் வயதான 1842 ஆம் ஆண்டில் மேரி என்னும் மங்கையை மணந்து கொள்கின்றார். வழக்கறிஞர் தொழிலிலே பெரும் பாலும் நாட்டம் செலுத்திக் கொண்டிருந்த லிங்கன் அரசியலிலே பெரிதும் ஈடுபட்டார் என்றால் அதற்குக் காரணமாக இருந்தவள் மேரியேதான். ஆபிரகாம் நல்ல உடையோடு திரியவேண்டும் நாகரிக நடையோடு வாழவேண்டும் என்பதிலே பெரிதும் அக்கறை காட்டினாள் மேரி. அவ் அக்கறை தன் பெருமைக்காகவே இருந்தாலும்கூட அது ஆபிரகாம் முன்னேற்றத்திற்குத் துணையாக இருந்தது என்பதற்குச் சந்தேகம் இல்லை. லிங்கன் தலைவர் தேர்தலுக்கு நிற்க விரும்பாத போது "நான் அமெரிக்கத் தலைவரின் மனைவி” என்று சிறப்படை வதற்காகவாவது தலைவர் தேர்தலுக்கு நில்லுங்கள்" என்று வற்புறுத்தினாள் மேரி. கோபக் குணமும் கொடுமைச் செயலும் குடி கொண்டவளாக அவள் இருந்தாலுங்கூட “தாம் தலைவரான தற்குக் காரணமாக இருந்தவள் மேரியே" என்று கூறிக்கொள்ள லிங்கன் தவறியதில்லை.

இல்லற வாழ்க்கை

மேரிக்கு நான்கு ஆண் குழந்தைகள் பிறந்தன. அவர்களைக் கட்டுப்படுத்தி லிங்கன் வளர்க்கக் கருதியது இல்லை. காரியா லயத்தில் அத்தனை குழந்தைகளும் கூடிச்சேர்ந்து கூத்தடிக்கும். வைத்த எந்தச் சாமானும் வைத்த இடத்திலே மீண்டும் இருக்காது. லிங்கனை வேலை செய்வதற்கும் விட்டு வைப்பதில்லை. லிங்கன் படுத்திருந்தாலும், உட்கார்ந்திருந்தாலும் மேலே ஏறி விளையாடு வார்கள்; அடிப்பார்கள்; மிதிப்பார்கள். தங்கள் விளையாட்டிலே கலந்து கொள்ளக் கட்டளை இடுவார்கள். லிங்கன் வேலைக் கவனிப்பிலே இருந்து விட்டால் எட்டி யுதைத்துவிட்டுப் பொங்கிக் கொழிப்பார்கள். அத்தனையையும் பொறுத்துக் கொண்டு புன்முறுவலோடு காட்சியளிப்பார் அந்தப் பண்புப் பெருந்தகை! அவர் கொண்டிருந்ததெல்லாம் "அளவிறந்த அல்லல் தாம் அனுபவித்தாலும் அடுத்தவர்களாவது அகமகிழ்ச்சி கொண்டிருக் கட்டும்” என்பதுதான்.