உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

நடுத்தர வாழ்வு

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

சுதந்திர நீக்ரோவை அடிமை நீக்ரோ என்று விற்க ஆரம்பித்தால் வழக்குத் தொடுத்து அவர்களுக்கு விடுதலை தந்தார். ஏழை எளியவர்களிடம் எவ்விதப் பணமும் வாங்காது நேர்மைக் காகவே வாதாடினார். இந்தக் காரியங்களால் நாளாவட்டத்தில் மேலும் மேலும் பேரும்புகழும் பெருக ஆரம்பித்தன. வழக்குகளும் அதிகமாக வரலாயின. இப்பொழுது லிங்கன் குதிரை ஒன்றை விலைக்கு வாங்கிக் கொண்டு அதில் ஏறிப்போய் வழக்குகளை விசாரித்து வந்தார். கிடைத்த வருமானத்தைக் கொண்டு வீட்டைச் சிறிது விரிவுபடுத்திக் கொள்ளவும் வாய்ப்புக் கிட்டியது. லிங்கனது வாழ்வு இப்பொழுது நடுத்தர வாழ்வாக இருந்தது எனலாம். சொல்லாற்றல்

லிங்கன் வாதம் செய்வதில் வல்லுநராக இருந்தார். தம்மை ளமையிலே ஆதரித்து வந்த சீமாட்டி ஒருத்தியின் மைந்தன் கொலைக் குற்றம் சாட்டப்பட்டுத் தூக்குமேடைக்குச் செல்லக் கூடிய நிலைமையில் இருப்பதைச் செய்தித்தாள் வழியாக லிங்கன் அறிந்தார். அவர்கள் வேண்டுதலை எதிர்பார்க்காமல் தாமே முன்வந்து சீமாட்டியின் மகன் சார்பிலே வழக்காடினார். அதற்கு முன்பு 'இவனே குற்றவாளி' என்று முடிவு கட்டப் பட்டிருந்தது. மேல் விசாரணை யாக லிங்கன் எடுத்துக்கொண்டு, "இவன்தான் கொலை செய்தான் என்பது உமக்குத் தெரியுமா?" என்று எதிரியின் சாட்சியினிடம் வினவினார். "ஆம். நான் நேராக என் கண்ணால் கண்டேன்" என்றார் அவர்."அப்பொழுது நேரம் என்னவாக இருக்கலாம்" என்று மீண்டும் லிங்கன் வினவினார். சாட்சியோ "இரவு 10 முதல் 11 மணியளவுக்குள் இருக்கும்” என்றார். "இரவு 10 முதல் 11 மணி என்பதில் திருத்தம் ஒன்றும் இல்லை என்று எண்ணுகின்றேன். அந்த இரவில் இவன்தான் கொலை செய்தான் என்பதை நீர் எப்படித் தெளிவாகக் கண்டிருக்க முடியும்?" என்று மேலும் கேட்டார்லிங்கன். “அப்பொழுது நிலா பகல் போல் ஒளி வீசிக் கொண்டிருந்தது. அதனால் இவர்தாம் கொலையாளி என்பது தெளிவாகத் தெரியும்! சந்தேகம் இல்லை” என்றார் சாட்சி. நீர் இவன் கொலை செய்ததை இரவு 10 முதல் 11 மணிக்குள் பார்த்தீர். அப்பொழுது நிலா ஒளி வீசிக் கொண்டிருந்ததால் இவன் தான் என்பது தெளிவாகத் தெரிந்தது; அப்படித்தானே?" என்று சாட்சியளித்த பதிலெல்லாம் சேர்த்துக்