உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணல் ஆபிரகாம்

41

கூறினார் லிங்கன். நீதிபதியைப் பார்த்து "நீதிபதியவர்களே, கொலை நடந்தது இரவு 10 முதல் 11 மணிக்குள் என்றும், அந் நேரத்தில் நிலவொளி தெளிவாக இருந்ததென்றும் சாட்சியார் கூறுகின்றார். ஆனால் பஞ்சாங்கமோ அன்று 12 மணிக்கு மேல் தான் நிலவுகால் வீசலாயிற்று என்பதைக் காட்டுகின்றது. அப்படி யானால் இவர்கூறிய வாக்கை உண்மையென ஒப்புக்கொள்ள வழியில்லாது போகின்றது, என்று சொல்லிவிட்டு உட்கார்ந்தார்.

லிங்கன் சாதுரியத்தால் பொய்க்குற்றம் சாட்டப் பட்டவன் விடுதலையடைந்தான். சீமாட்டி எவ்வளவோ வற்புறுத்தியும் கூடச் சிறிதும் பணம் பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டார் லிங்கன். மறுத்ததோடு நில்லாமல் "எப்பொழுது எப்பொழுது என்னுதவி தேவைப்படுகின்றதோ அப்பொழுதெல்லாம் வாருங்கள்" என்று ஆறுதல் மொழி கூறினார். அவ்வளவு நன்றியறிதல் லிங்கனிடம் இருந்தது.

நன்னெஞ்சம்

விதவை ஒருத்தியின்மீது சீமான் ஒருவர் வழக்குத் தொடர்ந் திருந்தார். அச்சீமான் தம்வழக்கை லிங்கன் எடுத்து நடத்தும்படி வேண்டிக்கொண்டார். உண்மையில் சட்டம் சீமான் பக்கம்தான் சாதகமாக இருந்தது. உறுதியாக வெற்றி பெற்றுத் தரலாம்; சிக்கலான வழக்குமில்லை. ஆயினும் லிங்கன் அந்த வழக்கை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார். சீமானிடம் "உங்கள் பக்கம் சட்டம் சாதகமாக இருந்தாலுங்கூட, இதனை நடைமுறைக்குக் கொண்டு வரும்போது ஒரு விதவைப் பெண்ணும் அவள் குழந்தை களும் அல்லலுற வேண்டிய திருக்கின்றது. இந்த இடத்தில் எனக்குச் சட்டத்தைப் பார்க்கிலும் கூட ஒழுங்கு, சக்தி வாய்ந்ததாகத் தெரிகின்றது" என்று கூறி, வாதாட மறுத்து விட்டார். "வருமானத்தைப் பற்றிக் கவலை. இல்லை; அதனால் அடுத்தவர் வாழ்க்கைத் தரம் பாதிக்கக் கூடாது" என்பது லிங்கனின் கொள்கை.

நாய்க்கடி வழக்கு

ஒரு சமயம் ஒரு வேடிக்கையான வழக்கு வந்தது.வழியே சென்று கொண்டிருந்த ஒருவன் தன்னைக் கடிக்க வந்த நாயைச் சமாளிப்பதற்காக அவன் வைத்திருந்த கம்பை வீசினான். அந்தக் கம்பு கத்தி செருகப் பட்டதாக இருந்ததால் அது நாயின் வாயைக் கிழித்து விட்டது. நாய் இறந்தது.