உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

"வழிப்போக்கன் தற்காப்புக்காகச் செய்திருந்தால் கத்தியில்லாப் பின்புறத்தால் நாயை வீசியிருக்கலாம். அவ்வாறு செய்யாததால் வஞ்சம் தீர்ப்பதற்காகவே செய்யப்பட்ட காரியமாகும்" என்று குற்றம் சாட்டப் பட்டான். எதிர்த் தரப்பில் லிங்கன் வாதாடினார். அதுகால், "இவர்தடியின் பின்புறத்தால் நாயைத் தாக்கியிருக்கலாம்தான். ஆனால், அத்ந நாயும் பின் புறமாகவே ஓடிவந்து இப்படிப் பின்புறத்தால் கடித்திருக்கலா மல்லவா? என்று சொல்லிக் கொண்டே பின்புறமாக ஓடிவந்தார். மன்றத்தில்சிரிப்பொலி அடங்கவில்லை. வெற்றி லிங்கன் பக்கம்

தான்.

ஒழுங்குள்ள ஆபே

இப்பொழுது லிங்கன் வாழ்க்கைத் தரத்தை இன்னும் சிறிது உயர்த்திக் கொண்டார். அதே நேரம் தம் தந்தைக்கும், எதிர்பார்த்ததற்கு மாறாக அன்னையினும் பன்மடங்கு அன்பு செலுத்தி வந்த சிற்றன்னைக்கும் உதவி செய்ய எண்ணினார். அவர் எண்ணப்படி செய்யப் பெரும் தடைக்கல்லாக மேரி இருந்து வந்தாள். ஆனாலும் அவ்வப்போது தம்மால் இயலுமட்டும் பண உதவி செய்தார். சிற்றன்னை பெயரால் நிலம் வாங்கிவைத்து நிலையான வருமானமும் உண்டாக்கினார். இவ்வளவு காரியங் களும் செய்ததன் பின்னர் "ஒழுங்குள்ள ஆபே" என்ற உயர்ந்த பெயர் அனைவர் உரையிலும் உள்ளத்திலும் இடம் பெறலாயிற்று. இந்தப் பாராட்டைக் கேட்டுக் கொண்டிருக்க லிங்கனுக்குப் பொழுது இல்லை. தம் இலட்சியம்நிறைவேற்றப்பட வேண்டுமே என்ற ஏக்கமே எப்பொழுதும் வெதும்பிக் கொண்டிருந்தது.