உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

தீ வளர்ப்பு!

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

தென்னாட்டிலே டக்ளஸின் புகழ் விண்மதி போல் ஒளிவிடத் தொடங்கியது. அதனால் அடிமை முறையை ஒழித்திருந்த வடநாடுகளில் சிலவற்றைத் தென்னாட்டுடன் சேர்த்துக்கொள்ள முயற்சி நடந்து கொண்டிருந்தது. அதற்கு முதல் முயற்சியாக "மிசௌரி ஒப்பந்தம்" தகர்த் தெறியப் பட்டது. அதற்குக் காரணமாக இருந்தவர் டக்ளஸ்தாம். 1820 ஆம் ஆண்டிலே மிசௌரி ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தது. அந்த ஒப்பந்தப்படி சில மாகாணங்களில் அடிமை முறை நீக்கப் பட்டிருந்தது. அதை எதிர்த்து அடிமை முறை நீக்கப்பட்டிருந்த அந்த மாகாணங் களிலும் மீண்டும் அடிமை முறையை ஆக்கும் தீர்மானம் ஒன்றை டக்ளஸ் செனட்டிலே கொண்டு வந்தார். இஃது அணையப்போகும் தீயை ஆத்திரத்துடன் வளர்ப்பது போலாக இருந்தது.

அமெரிக்காவின் சரிதத்தை மேலும் களங்கப்படுத்தி, மனிதர் சுதந்திரத்தைப் பறிக்கும் இத் தீர்மானம் செனட்டிலே நிறை வேறியவுடனே வட நாட்டவர் கொதிப்பு மிகுந்தது. அதன் விளைவுதான் ஆபிரகாமைச் செனட்டின் உறுப்பினராக நிற்க வைத்தது.

செனட் தேர்தல்

குடியரசுக் கட்சியின் அங்கத்தினராகச் செனட் தேர்தலுக்கு ஆபிரகாம் நின்றார். அவரை எதிர்த்து டிரம்பல் என்பவர் நின்றார். லிங்கனுக்கு வெற்றியே கிட்டும் என எதிர்பார்க்கப் பட்டாலும் தோல்வியையே அணைத்துக் கொள்ள வேண்டியவரானார். லிங்கன் பட்ட துயரத்தைப் பார்க்கிலும் மேரி பட்ட துயரமே பெருகியது. ஆயினும் சோர்வடைந்த லிங்கனைத் தட்டி யெழுப்பினாள்; சுய உணர்வுக்குக் கொண்டு வந்தாள்.

கூட,

மீண்டும் செனட் தேர்தல் ஆரம்பமானது. இப்பொழுது எதிர்ப்பவரோ நெடுநாள் அரசியல் விரோதி: சண்ட மாருதப் பேச்சாளி; அரசியல் சக்கரங்களை ஆட்டிவிட்டு அசையாது நிற்கும் வீரர் - டக்ளஸ்தாம். அவருக்குச் சாதகமாகத் தென்னாட்டுப் பண்ணையாளர்கள்; தென்காலனி அரசுகள்! 'பணத்தைச் சூறையாடிப் பவனிவரும் டக்ளஸ் எங்கே? பஞ்சையர்க்காகவே உழைத்துவரும் பஞ்சை லிங்கன் எங்கே?" என்று பன்முறை தம்மைத்தாமே கேட்டுக் கொண்டே லிங்கன் தேர்தல் காரியங் களைக் கவனித்தார்.