உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+

46

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

லிங்கன் தலையிலே பேரிடி விழுந்தது போலாக செனட் தோல்வி இருந்தது. வாழ்க்கையே பெரு வெறுப்புக்குரியதாகப் போய்விட்டது. "சே! சே! இந்தஅரசியல் அளற்றிலே உழல்வதைப் பார்க்கிலும் அரசியலுக்கு மூடுவிழா முடித்துவிட்டு நிம்மதியாக இருந்த விடலாம்" என்று ஒருபக்கத்தே எண்ணம் எழும்பிக் கொண்டிருந்தது.

"நாம் வாழவே தகுதி இல்லை; வெற்றி நிச்சயம் கிடைக்கு மென்றல்லவா எண்ணினோம்; அதனால் தானே நம்மையே தேர்ந்தெடுத்தனர் நம் கட்சியினர். இப்பொழுது அவர்கள் கூறிக் கொள்வது என்ன? "நீயே வேண்டாததைப் பேசிக் கெடுத்துக் கொண்டாய்" என்றல்லவா குறை கூறுகின்றனர்? தொட்ட தெல்லாம் கெட்டது.

'வாணிகத்திலே தோல்வி! வழக்கறிஞராகப் பணியாற்று வதிலே வருமானக் கட்டை. போன போன இடங்களிலெல்லாம் பழி! அரசியலை விட்டு விட்டு வழக்காடத் தொடங்கிவிட வேண்டியதுதான். நம்மவர்களே நமக்குத் தடையாக இருக்கும் போது மற்றவர்கள் உதவிக்கு வருவார்களா?" என்ற ஏக்கத்திலே சிக்கிச் சீரழிந்து கொண்டிருந்தார் லிங்கன்.

அரசியல் ஆசிரியை

"வெற்றி எளிதில் கிட்டிவிடாது; மேலும் மேலும் எவர் விடாப்பிடியாக இருக்கின்றனரோ அவரே வெற்றிக்குரியவர்! தோல்வியே வெற்றிக்குத் துணை செய்யும் கருவி; மற்றவர்கள் தம் வெற்றிக்காக எப்படி எப்படிப் பாடுபடுகின்றார்களோ அதுபோல நாமும் பாடுபடாது விசாரப்பட்டுக் கொண்டிருந்தால் வெற்றி நம் வீட்டு வாசலுக்கு வந்து நிற்கவா செய்யும்?" என்று லிங்கனது ஏங்கிய மனத்தில் எழுச்சியூட்டினாள் லிங்கனது அரசியல் ஆசிரியை மேரி.

"வாணிகமோ வழக்கறிஞர் துறையோ வேண்டுமானால் வருமானத்தைத் தரலாம். வருமானம் என்ன வருமானம்!*கூத்துக்குக் கூடி அது முடிந்தவுடனே பிரியும் மக்கள் போலாகக் கையை யடைந்து காலியாகும் செல்வத்தைச், செல்வம் என்று எண்ணிக் கொண்டு வாழ்வைப் போக்க ஆரம்பித்தால் நம் வைர எண்ணம்

கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்

போக்கும் அதுவிளிந் தற்று.

குறள் 332.