உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணல் ஆபிரகாம்

47

என்னாவது? அடிமையர் குடி வாழ்வது எப்போது?" என்ற சிந்தனைச் சுடர் பற்றிக் கொண்டது லிங்கனை.

வில்லியம் வில்பர்

சிந்தனைச் சுடர் ஒளிவிடும் லிங்கன் முன்னாக வீரரொருவர் வருகின்றார்! அவர் யார்? வில்லியம் வில்பர் போர்ஸ்.

பிரபுக்கள் குடும்பத்தைச் சேர்ந்த இப்பெருந்தகை பட்டம் பவிசு பெற்றிருந்தாலும் ஏழையர் தோழனாய் விளங்கினார். தம் 21 ஆம் வயதிலே பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினராகும் பெரும் பேறு பெற்ற இவர் அடிமையர் அவல நிலைமையைக் கண்டு அதை ஒழித்தே தீர்வது என உறுதி பூண்டிருந்தார். அதனால் 1791 ஆம் ஆண்டிலே அடிமை ஒழிப்புத் தீர்மானத்தை, அடிமை வியாபாரத்தையே முதன்முதல் தொடங்கி, ஆண் டொன்றுக்கு 36,000 அடிமையரை உண்டாக்கிக் கொண்டிருந்த பிரிட்டன் பாராளுமன்றத்திலே கொண்டு வந்தார். தோல்வி மேல் தோல்வி; தூற்றுதல்மேல் தூற்றுதல்.

'வெறுங்கனவு" என வெகுண்டெழுந்தது பாராளுமன்றம். விட்டாரில்லை வில்பர் போர்ஸ். ஒருமுறை இருமுறையல்ல ன்பது முறை, அத் தீர்மானத்தை விடாது கொண்டுவந்து கொண்டே இருந்தார். கிடைத்தது தோல்வியேயாயினும் கிடுகிடுத்து விடவில்லை. "நெஞ்சில் உரமிருந்தது; நேர்மைத் திறம் இருந்தது""வெற்றிமேடைக்கு ஏறவேண்டிய படிக்கற்கள் ஏராளம். அவற்றுள் ஒன்பது படிகள் ஏறியிருக்கின்றோம்" என்ற துணிவுடன் மேலும் மேலும் செயலாற்றிக்கொண்டு வந்தார்.

சமயம் வாய்க்கும் பொழுதெல்லாம் பாராளுமன்ற உறுப்பினர் உதவியை நாடினார்; உதறியடித்தனர்.

நண்பர்களிடம் நயமாக வேண்டினார்; “நடக்கக் கூடிய செயலன்று" என்று நகர்ந்து விட்டனர்.

பத்திரிகைகளோ “பகற்களவு” என்று பழி புராணம் பாடிக் கொண்டிருந்தன. தளரவில்லை தன்னம்பிக்கையாளர்.

'வெற்றியாயினும் சரி! தோல்வியாயினும் சரி! பத்தாம் முறையும் பார்த்துவிடுவது" என்று முனைந்தார். வெற்றி! வெற்றி! வெற்றி முழக்கம் விண்ணைப்பிளக்க வீறுநடையிட்டார் வில்பர் போர்ஸ். 1791 இல் தொடங்கிய தீர்மானம் 1807 இல் நிறை வேற்றப்பட்டது.