உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

விடுதலை வீரர்

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

"வில்பர் போர்ஸ் எப்படி வெற்றி கண்டார்? முயற்சி! முயற்சி!! அம் முயற்சி என்ன, அவரோடு மடிந்து மண்ணோடு மண்ணாகி விட்டதா? அவர் அடிச்சுவட்டைப் பற்றுவோம்; வெற்றி நமதே" என்று எழுச்சிப் பண் பாடினார் லிங்கன். மேரியின் இடிப்புரை, வில்பரின் புரட்சிச் செயல் இரண்டும் தட்டியெழுப்பி விட்டன லிங்கனை. புதுப்பிறப்பு; வெற்றி தோல்விக்கு அணுவும் அயரா ஆபிரகாம்; விடுதலை வீரர்; ஆமாம்! அவரே விடுதலை வீரர்.

1860 ஆம் ஆண்டிலே குடியரசுக் கட்சி சிகாகோ நகரிலே கூடியது.ஏன்?

பிரவுன்

பிரவுன் என்பவர் நீக்ரோ! விடுதலைக்காகத் தீவிரப் புரட்சி செய்தவர்.படைவீரர் பலரைச் சேர்த்துக் கொண்டு, அடிமை முறையைக் கொண்டிருக்கும் அரசை எதிர்த்துத் தீருவதென வீறிட்டெழுந்தார். அதனால் அரசினரின் ஆயுதச் சாலையைத் தாக்கி வீரர் பலரை வீழ்த்தினார். நீக்ரோவர் உதவியும் உரிய சமயங்களில் பிரவுனுக்குக் கிடைத்துவந்தது. இக்கிளர்ச்சியை ஒழிக்க அரசாங்கமும், படைவீரர்களையும் ஆயுதங்களையும் ஏராளமாகக் குவித்துக் கொண்டிருந்தது. பிரவுன் பிடிபட்டார். அவர் மைந்தர் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். "அரசாங் கத்தைக் கவிழ்க்கத் துணிந்த துரோகி" என்று குற்றம் சாட்டி, சார்லஸ்டவுன் நீதிமன்றம் பிரவுனுக்குத் தூக்குத்தண்டனை விதித்தது.

"மாந்தராய்ப் பிறந்தவர் மற்றவர்க்கு அடிமையில்லை என்று அமெரிக்காவின் உரிமைக்குரல் இருக்கும்போது, அதனையே செயலில் காட்ட முனைந்த என்னை வீரனென்றல்லவா விருது தந்து பாராட்டவேண்டும்; அதற்குமாறாகப் பழிப்பதோடு என் உயிர் குடிக்கவும் நீதியின் பெயரால் துடிக்கின்றீர்கள். நீதி சொல்பவனை நிர்மூலமாக்க வந்த நீதிபதிகளே! உங்களைக் காலம் பழித்தே தீரும்" என்று வீரக்கணை தொடுத்துவிட்டு இறுதி மூச்சையும் விட்டுவிட்டார்.

இக் கொடுஞ் செயலால் வடநாட்டிலே கொந்தளிப்பு மிகுந்தது; துக்கக் கொண்டாட்டம் கொண்டாடினர். தென்னாட்டு நீதிபதிகள் போலவும், நிலக்கிழார் போலவும் பொம்மை செய்து