உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணல் ஆபிரகாம்

49

தெருவழியே இழுத்து நெருப்பிட்டனர். உள்ளத்தே எரிந்து கொண்டிருந்த தீ, வீதிகளிலும் தெருக்களிலும் பற்றிக் கொள்ள லாயிற்று! அவ்வளவு எரிச்சல்.

சிகாகோவில் கூட்டம்

பிரவுனுக்கு நேர்ந்த துரோகச் செயலைக் கண்டித்துப் பேசி, தங்கள் குடியரசுக் கட்சியின் சார்பாக அமெரிக்கத் தலைவர் பதவிக்குத் தகுந்த ஒருவரை நிறுத்திவைக்க வேண்டும் என்ற எண்ணத்தால்தான் சிகாகோ நகரில் குடியரசுக் கட்சியின் மாநாடு தொடங்கியது. அம்மாநாட்டிலே குடியரசுக் கட்சியின் சார்பாகத் தலைவர் தேர்தலுக்குப் போட்டியிடுவதெனத் தேர்ந்தெடுக் கப்பட்டார் அருளாளர் ஆபிரகாம். அடிமை நீக்ரோவருக்கு விடுதலை தரவேண்டும் என்ற ஒரே ஒரு கொள்கையின் மேலாகத் தான் குடியரசுக்கட்சி போட்டியிடப் போவதாகக் கூறிக் கொண்டது.

கட்சித் தேர்தலிலும் லிங்கனுக்கு எதிர்ப்பில்லாமல் போய்விடவில்லை. சிவர்ட் என்பவர் லிங்கனை எதிர்த்துப் போட்டியிட்டார். எதிர்பாராதவிதமாக சிவர்ட்டுக்கு விரோதி யான ஒருவர் உதவி லிங்கனுக்குக் கிடைத்தமையால் சிவர்ட்டுக்குப் பாதகமாக மாறி விட்டது. லிங்கன் வெற்றியுற்றார். கட்சி, லிங்கனைத் தேர்ந்தெடுத்துவிட்டது. இனிமேலல்லவா தலைவர் தேர்தல் இருக்கின்றது!

கட்சித் தேர்தல் முடிவு

கட்சித் தேர்தல் முடிவைத் தெரிவிக்க லிங்கனிடம் நண்பர் சிலர் ஓடோடியும் வருகின்றனர். விளையாட்டு மைதானத்தில் இருந்த லிங்கன் செய்தியை அறிந்துகொண்டு, "நண்பர்களே, இந்த மகிழ்ச்சியான செய்தியை என்னைப் பார்க்கிலும் அதிகமாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் மேரியினிடம் தெரிவியுங்கள்” என்று வேண்டிக் கொண்டார். அவ்வளவு பதவிப்பற்று இருந்தது மேரிக்கு.

லிங்கன் வெற்றியைப் பாராட்டியும், அவரைப் பாராட்ட வருபவர்க்கு விருந்தளிக்க வேண்டியும் அன்பர்கள் சாராயப் புட்டிகள் பலவற்றை அனுப்பி வைத்திருந்தனர். லிங்கனோ அவற்றை யெல்லாம் தமக்கு அனுப்பி வைத்தவர்களுக்கே மீண்டும் அனுப்பிவைத்து, "இறைவனால் எல்லோருக்கும் இலவசமாக அளிக்கப்பட்டுள்ள நீர் இருக்கும்போது வெறியூட்டும் இந்தச் சாராயத்தைக் குடிக்கவோ மற்றவர்களுக்குக் கொடுக்கவோ