உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

விரும்பாதவனாக இருக்கின்றேன். தங்கள் உதவிக்கு நன்றி; மன்னிக்க” என்று சீட்டும் எழுதியிருந்தார். இதே உறுதியை இறுதிவரை கடைப்பிடித்து வந்த பெருமை லிங்கனுக்கு உண்டு.

லிங்கன் குடியரசுக் கட்சியின் சார்பாகத் தலைவர் தேர்தலுக்கு நிற்கப் போவதை அறிந்த தென்னாட்டுக் காலனிகள் தங்கள் வைரியான லிங்கனைத் தலைவராக வரவிடுவதில்லை என்று எதிர்க்கலாயினர். லிங்கன் தலைவராக வருவாரே யானால் "ஐக்கியம் நில்லாது; அடக்குமுறை செல்லாது" என்று கண்டனம் விடுத்தனர்.

(6

அடிமை முறையை அகற்றவந்த அருளாளரே! அமர்க் களத்தே சந்தியும்" என்று செய்தித்தாள்கள் எச்சரித்தன.

"பதவிகளிலிருந்து விலகிவிட்டுத் தெற்குக் காலனிகளுடன் சேர்ந்து கொள்வோம் பாருங்கள்" என்று பெரும் பெரும் பதவி களில் இருந்தவர்கள் பயம் காட்டினர். எதையும் பொருட்படுத்தாத நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. தலைவர் தேர்தலும் முன்னின்றது. வெற்றி!

தேர்தல் என்னாகுமோ என்ற ஏக்கத்திலே ஸ்பிரிங் பீல்டில் புரண்டு கொண்டிருக்கிறார் லிங்கன். மேரியோ விநாடிதோறும் செய்தியை எதிர்பார்த்த வண்ணம் இருக்கின்றாள். போதாக் குறைக்கு நண்பர்களும் குழந்தைகளும் தேர்தல் நிலைமை என்னாகும் என லிங்கனைப் பிய்த்தெடுத்துக் கொண்டிருக் கின்றனர். தேர்தல் காய்ச்சலிலே முணகிக் கொண்டிருக்கின்றது வீடு.

செய்தி வந்தது; ஆம்! வெற்றிச் செய்தி வந்தது. விறகு வெட்டியின் மைந்தன் வெள்ளைமாளிகையிலே ஏறுவதற்குரிய பொன்னான செய்தியைக் கொண்டு வந்தனர் நண்பர். மேரி மகிழ்ச்சிப் பெருக்கிலே எக்களித்துக் கொண்டிருந்தாள். மேதை லிங்கன் ஒரு மூலையிலே உட்கார்ந்து என்னென்னவோ எண்ணித் தத்தளித்துக் கொண்டிருந்தார்.