உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. வெள்ளை மாளிகையில் அமைதி

நாட்டிலே குழப்பம் மிகுந்து விட்டது. தெற்குக் காலனிகள் ஐக்கிய அமைப்பினின்றும் விலகிக் கொண்டு விட்டதாக முழக்கிக் கொண்டிருந்தன. தென்னாட்டின் உளவாளிகள் பலர் வடநாட்டிலே உலாவித்திரியலாயினர். தலைவர் பதவி ஏற்புக்கு முன்னரே ஆபிரகாம் தலையைத் தரையிலே உருட்டி விட வேண்டுமெனச் சதிக் கூட்டம் தயாராகிக் கொண்டிருந்தது. இந்நிலைமைக் கிடையேயும் கல்லறை ஒன்றின் முன் அமைதியாக மண்டியிட்டுக் கசிந்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார் ஆபிரகாம்!

நீக்ரோவர் விடுதலைக்காக ஆபிரகாம் அல்லும் பகலும் அயராது பாடுபட்டுக் கொண்டிருந்தபோது அவர் தந்தை தாமஸ் லிங்கன் விடுதலையடைந்து விட்டார். அவர் ஆன்மா அமைதியுறும் படி செய்ய ஆண்டவனிடம் முறையிட்டுக் கொண்டார். இறுதி நேரம் தம் தந்தைக்குச் செய்ய வேண்டிய தொண்டுகளைச் செய்யாது தவிர்ந்ததற்காக இறைவனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். பின்னர்ச் சிற்றன்னையையும் அவர் குமாரர்களையும் இறுதி முறையாகச் சந்தித்து விடை பெற்றுக் கொண்டு ஸ்பிரிங் பீல்டு வந்து சேர்ந்தார்.

விடைபெறுதல்

ஆபிரகாம் ஸ்பிரிங் பீல்டு வந்து சேர்ந்தவுடனே வாசிங்டன் செல்லுவதற்கு வேண்டிய ஆயத்தங்களைச் செய்து கொண்டிருந்தார். பொருள்களையெல்லாம் கட்டிவைத்து “ஆ. லிங்கன், வெள்ளை மாளிகை, வாசிங்டன்." என்ற முகவரியையும் தம் கையாலே எழுதினார். ஆயத்தம் அனைத்தும் செய்யப்பட்டது. அவருக்கு என ஏற்பாடு செய்யப்ட்ட இரயில் அவரை ஏற்றிச் செல்லக் காத்திருந்தது. ஆபிரகாமை, செல்லும் வழியிலேயே கொல்லுவதற்குத் தக்க சூழ்ச்சிகள் நடைபெற்று வருவதாகவும், குண்டுகள் இடைஇடையே பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வந்து கொண்டி ருந்தன. தம் உயிரைத் தத்தம் செய்வதற்காகவே வாசிங்டன்