உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

செல்வதாக எண்ணிக்கொண்டே நண்பர்களிடம் லிங்கன் விடை பெற்றுக் கொண்டார். வண்டிவரை வந்து வழியனுப்பியவர்கள் ஏராளம் பேர்களாவர். அவர்களிடம், "எனது வாலிபப் பருவம் முதல் இந்த வயோதிகப் பருவம் வரை கால் நூற்றாண்டாக உங்களோடு இந்த ஸ்பிரிங் பில்டிலே வாழ்ந்து வந்தேன். இங்கே தான் என் குழந்தைகள் அனைவரும் பிறந்தனர். அவர்களுள் ஒருவன் இங்கேதான் அடக்கம் செய்யப் பட்டிருக்கின்றான். நான் இப்பொழுது ஏற்றுக் கொண்டிருக்கும் பொறுப்பு தலைவர் வாசிங்டன் ஏற்றுக் கொண்டிருந்த பொறுப்பினும் பெரிதாக இருக்கின்றது. வாசிங்டனுக்கு உதவிய கடவுளின் உதவியின்றி என்னால் எதுவும் நிருவகிக்க முடியாது, என்பது தெளிவு. நீங்கள் கடவுளிடம் உங்களுக்காக வேண்டுவதுடன் எனக்காகவும் வேண்டிக் கொள்ளுங்கள். இறைவன் கைகளிலே உங்கள் அனைவரையும் ஒப்படைக்கின்றேன். நான் இப்பொழுது இச்சில சொற்களோடு விடைபெற்றுக் கொள்ள வேண்டியவனாக இருக்கின்றேன். இனி எப்பொழுது கூடுவோம் என்பது அறியக் கூடாததாக இருக்கின்றது" என்று கூறி வணக்கமிட்டுப் பிரிந்து சென்றார்.

வழிகளிலெல்லாம் வம்பர் குழு மறைந்து இருப்பதாகச் செய்திவந்தது. ஆயினும் வலிய உள்ளம் கொண்ட லிங்கன் எதற்கும் அஞ்சாது, இன்னார் என எவரும் அடையாளம் கண்டு கொள்ளா வகையில் வெள்ளை மாளிகைக்குள் புகுந்துவிட்டார். இடைஇடையே எத்தனையோ இடங்களில் நின்று நண்பர்களைச் சந்திப்பதையும், வரவேற்புப் பெற்றுக் கொள்வதையும் லிங்கன் தவிர்த்துவிடவில்லை.

"லிங்கன் வாழ்க! லிங்கன் வாழ்க!!" என்ற குரல் வெள்ளை மாளிகையிலிருந்து வெளிக்கிளம்பிய பின்னர்ச் சதித் திட்டக்காரர் தங்கள் முகத்தில் சாம்பல் பூசப்பட்டு விட்டதாக எண்ணிக் கொண்டு வெட்கினர். தங்கள் அருமையான திட்டம் தகர்த்தெறியப் பட்டதல்லவா; அதனால்!

வெள்ளை மாளிகையில் ஆபிரகாம்

ஆபிரகாம் 1861 ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் நான்காம் நாள் தலைவர் பதவியேற்று வெள்ளை மாளிகைக்குள் கால் வைத்தார். அதற்கு முன்பே, தென்கரோலினா ஜார்ஜியா முதலான ஆறு காலனி நாடுகள் ஒன்றுக்குப் பின் ஒன்றாக ஐக்கிய அமைப்பினின்று விலகிக் கொள்வதாக மாகாண அமைப்பினின்று