உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணல் ஆபிரகாம்

53

தகவல் விடுத்தன. இதனை ஒட்டிய இரண்டு வார எல்லைக்குள் டெக்ஸாஸ் என்னும் காலனியும் பிரிந்துவிட்டது. இவ்வாறு பிரிந்து சென்ற காலனிகளனைத்தும் ஒன்றுகூடி, தலைவர் தேர்தலில் லிங்கனுடன் போட்டியிட்டுத் தோல்வியுற்ற 'டேவிஸ்' என்பவரைத் தலைவராகக் கொண்டு ஐக்கியமாக இயங்குவது என்னும் முடிவுக்கு வந்துவிட்டன.

"எங்கள் உரிமைகளில் வடநாட்டவர் தலையிடு கின்றார்கள். இதை ஐக்கிய அமைப்பு, கண்டிப்பதாகத் தெரியவில்லை. கண்டிப்பதற்கு மாறாக வடநாட்டவர்க்கு அனுசரணையாகவும் இருந்து வருகின்றது. இனிமேல் வரும் தலைவரும் எங்களுக்கு நீதி வழங்குவார் என்பதை எங்களால் நம்பிக்கொள்ள முடியவில்லை" என்று குரலெழுப்பிவிட்டு 1861 பிப்ரவரித் திங்களிலேயே போட்டி அமைப்பை ஏற்படுத்தி விட்டன.

சிவர்ட்- அமைச்சர்

.

5

தம்முடன் தலைவர் தேர்தலுக்குப் போட்டியிட்டுத் தோல்வியுற்ற 'சிவர்ட்' என்பவர், தமக்கு எதிரியாக இருந்தாலும் கூட திறமையும் அனுபவமும் கருதி லிங்கன், உள்நாட்டமைச் சராக நியமித்திருந்தார். பொறுப்பேற்றுப் பணியாற்றி வந்த சிவர்ட் தம்முடைய பதவியினின்று தம்மை விலக்கிவிட வேண்டு மென்று தலைவருக்கு இப்பொழுது விண்ணப்பம் அனுப்பி வைத்திருந்தார். அனுபவமிக்க சிவர்ட் பதவியினின்று விலகிச் செல்வதை விரும்பாத லிங்கன் மன்றாடி வேண்டிக் கொண்டு மீண்டும் பதவியில் நிறுத்திவைத்தார். மேலும் மேலும் 'சிவர்ட் தலைவரை மதிக்கக்கூடிய அளவில்நடந்து கொள்ளா திருந்தும் வட நாட்டின் நலமொன்றே விரும்பிச் சுயமதிப்பையும் பாராட்டாது அவரைப் பதவியில் வைத்துக் கொண்டு இருந்தது லிங்கனது பெருந்தன்மையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. பலர் "சிவர்ட்டே தலைமைப் பதவிக்குத் தக்கவர்" என்று பறையறைந்து கொண்டனர். “சிவர்ட் இல்லையேல் அரசியல் செவ்வையாக நில்லாது; அதற்காகவே வேலைநீக்கத்தைத் தலைவர் ஒப்புக்கொள்ள வில்லை" என்றெல்லாம் வதந்திகளைப் பரப்பி விட்டனர். லிங்கன் எதனையும் செவியிலே போட்டுக் கொள்ளாது இருந்துவிட்டார்.