உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

முதற் சொற்பொழிவு

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

தலைமைப் பதவி ஏற்ற முதல் சொற்பொழிவிலேயே “நம் முன் வந்திருக்கும் உள்நாட்டுப் போர் என் கையில் இருக்கும் பொறுப்பன்று; அது தங்கள் அனைவரிடமும் இருக்கும் பொறுப்பே தான். எந்தக் காலனியும் ஐக்கிய அமைப்பினின்று தானாகவே விலகிச் செல்லும்படியான முறைமை செல்லு படியாகாது" என்று உரை நிகழ்த்தினார். அத்தகைய அவசியம் காலடிவைத்தவுடனே தேவைப்பட்டிருந்தது. “எவரையும் எதிரியாகவோ வேண்டாத வராகவோ வைத்திருக்க விரும்பவில்லை, ஐக்கியத்தைச் சிதைக்கவும் விரும்பவில்லை" என்ற லிங்கன் தெளிந்த கருத்து இதனால் புலப்படுகின்றது.

நாட்டுப் பிரிவினை

போட்டி அமைப்புடன், வர்ஜீனியா, வட கரோலினா முதலான நான்கு காலனிகள் சேர்ந்துவிடத் தீர்மானித்த செய்தியும் லிங்கனால் அறியவந்தது. இந்த அதிர்ச்சியிலே "தலை சுக்கு நூறாகி விடுமோ" என்று ஏங்கிக் கிடந்தார். "முந்தையோர் கண்ட முழுமை நாட்டைப் பிரித்துப் பிளவாடப் பார்த்துக் கொண்டி ருப்பதா? அந்தோ! கொடுமையே; பழியைச் சுமந்து விட்டேன்" என்று கதறித் கண்ணீர் சொரிந்தார்.

"போட்டி அமைப்பினர் படையும் கருவியும் திரட்டி, பறை முழக்கிக்கொண்டு, பிற காலனிகளின் பாசறைகளையும் படைக்கலக் கொட்டில்களையும் தன்னடிப் படுத்தி விட்டனர்" என்ற குரல் தலைநகரை எட்டியது. ஆபிரகாம் - அந்தத் தன்னந்தனி உருவம் - வெள்ளை மாளிகையிலே கணநேரமும் நிற்க முடியாது உலாவிக் கொண்டே திரிகின்றது. என்ன செய்வது?

பேரிடி

பேரிடி ஒன்று விழுந்தது! விழுந்தது சம்டர் துறை முகத்தில் தான். ஆனால் அதன் தாக்குதல் சம்டர் துறைமுகத்தைத் தாக்கிய அளவைப் பார்க்கிலும் வெள்ளை மாளிகையினுள் கண்ணீரும் கதறலுமாய் நிற்கும் கடமைவீரர் இதயத்தைத் தாக்கியது. "ஐக்கியம் அகலக் கூடாது; முன்னோர் கொண்டு வந்த ஐக்கியத்தை அன்பர்களே, அழித்து விட வேண்டாம்; அன்பு முறை ஒன்றாலே காரியங்களைச் சாதிப்போம்; வன்புமுறை கொண்டதால் மடிபவர் யார்? நம்மவரே அல்லரோ?” என்று வேண்டிக் கொண்ட ஆபிரகாம் குரலுக்குத் தென்காலனியினர் தந்த மதிப்புத்தான் சம்டர் துறைமுகக் குண்டு வீச்சு!

டு

-