உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணல் ஆபிரகாம்

55

ன்னும் தாமதிக்க முடியாது. நான் தலைமைப் பதவி ஏற்கும் போது, ஐக்கிய அரசியலமைப்பைக் காத்தேதீர்வேன் என உறுதி எடுத்துக் கொண்டேன். அவ்வுறுதியைக் காக்க ஆயுத பலத்தைக் கொள்ளத் தான் வேண்டுமென்றால் அதற்கும் தயங்கப் போவதில்லை; அதில் எவ்விதத் தவறும் இருப்பதாகத் தெரியவும் இல்லை" என்ற முடிவுக்கு வந்துவிட்டார் ஆபிரகாம். போராட்டம் தொடங்கி விட்டது.

சம்டர் துறைமுகத்தைக் காத்து நின்ற தளபதி ஆண்டர்சனால் இரண்டு நாட்களே எதிர்ப்பைத் தாங்க முடிந்தது. வேறு வழியின்றி மூன்றாம் நாள் அடைக்கலம் அடைந்துவிட்டார். என் செய்வார்! எதிர்பாராத தாக்குதல்; ஆட் குறையும் ஆயுதத் தட்டுப்பாடும் அவரை வளைத்துக் கொண்டன.

தோல்வி மேல் தோல்வி

வேதனைப்பட்டுக் கொண்டிருக்க லிங்கனுக்கு நேரமில்லை. மெக்டவல் என்பவரைத் தளபதியாக்கி அவரோடு பெரும் படை ஒன்றையும் அனுப்பி வைத்தார். பெரும் போர்! சளைக்காத போர்! மூன்றாம் நாளிலே முறியடிப்பு. யாருக்கு வெற்றி? தென்பகுதியி னருக்கு. ஐக்கிய அமைப்பினர் கண்ட இரண்டாம் தோல்வியிது. பின்வாங்கும் நிலைமையிலே விழுந்த பிணங்கள் ஏராளம்.

"கேவலம்; தாங்கமுடியாக் கேவலம்! இரத்தம் ஓடவில்லையா ஐக்கிய அமைப்பினரிடம்?" என்று எழுதுகின்றன செய்தித் தாள்கள்: "வீரர்களே எழுங்கள்! பயந்தான் கொள்ளிகள் படுத்துத் தூங்கட்டும்" என்று எழுகின்றது படை. ஆயிரக் கணக்கிலே அனுப்பப்பட்டபடைகளல்ல; இலட்சக் கணக்கில்! இப்போதைய தலைவர் மெக்கல்லன்.

பழியோ பழி

மெக்கல்லனோ தளபதி என்ற பெயர் இருந்தாலே போதும் என்பதற்காகவே பொறுப் பேற்றவராகக் காட்சி வழங்கினார்; தலைவர் உரைக்குக்கூடச் உரைக்குக்கூடச் செவிசாய்க்காத செவிசாய்க்காத தலைக்கனம் பிடித்தவராக இருந்தார்; தன் எழுச்சி இல்லாத அவர், பிறர் தூண்டுதலையும் ஏற்காது போய்க் கொண்டிருந்த காரணத்தால் தோல்வி மேல் தோல்வி வந்த வண்ணமாகவே இருந்தது. ஆயினும் தோல்விக்குக் காரணம் தாமே என்பதையும் ஒப்புக் கொள்ளாது "படையனுப்ப வில்லை” “உணவளிக்கவில்லை” “ஆயுதம் இல்லை” என்று தலைவர் ஆபிரகாம் மீதே பழி சுமத்திக் கொண்டிருந்தார்.