உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

எதிர்ப்பணித் தளபதி 'லீ'யோ பெரும் சமர்த்தர். சமாளிக்கும் திறம் மிகப்பெற்றவர். தென்காலனிக்கு வெற்றி மேல் வெற்றி வாங்கித்தந்தவர். வந்த படைகளை யெல்லாம் வாரியடித்துப் பிணமாக்கிவிட்டு வாசிங்டனுள் புகுவதற்குச் சமயம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

மக்கள் குரல்

இந்த நிலைமையிலே தளபதிகளை நீக்கி விட வேண்டும் என்று மக்களின் ஆவேசக் குரல்எழும்பியது. மேரியும் இதற்குப் பக்கத்தாளம் இட்டுக்கொண்டு துயரப்படுத்த ஆரம்பித்து விட்டாள். லிங்கன், தளபதியை நீக்கும் செயலுக்கு அசைந்து கொடுக்கவில்லை. ஒரு பொறுப்பில் நியமிக்கப்பட்டவர்களை நீக்கிவிடுவதால் ஏற்படும் கேட்டை லிங்கன் தெளிவாக அறிந்திருந்தார். அதனால் பிறர் வற்புறுத்தலுக்கு அசைந்துவிடவில்லை.

பட்டாளத்திற்கு ஆள் சேர்த்துக் கொண்டிருந்த லிங்கனுக்குப் பட்டாளத்தவர்களில் சிலரைப் பதவியினின்று விடுதலையளித்து வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டது. இளமையிலே தம்மை ஆதரித்தவர்கள், பழகியவர்கள் ஆதரவு எதுவுமற்றவர்கள் என்பவர்கள் சாரை சாரையாக வந்து தமக்கு உரிமையானவர்களைப் போர்க்களத்தினின்று அனுப்பிவைக்கும் படி வேண்டிக் கொண்டனர். பிறர் அவலத்தை அணுவும் சகிக்க முடியாத ஆபிரகாம் தளபதிகளுக்குக் கட்டளையிட்டு விடுதலை வாங்கித் தரவேண்டிய நிலைமையில் இருந்தார். வீட்டுக்கு அனுப்பப்பட்டவர்களும் சாதாரணமானவர்களல்லர்! போர்க் களத்தே துப்பாக்கியும் கையுமாய் நின்றவர்கள்.

அறவினை யாதெனில் கொல்லாமை

துவேயன்றித் தளபதிகளால் மரண தண்டனைக்கு ஆட்பட்ட வீரர்கள் அநேகர். லிங்கனோ என்ன காரணம் கொண்டும் மரண தண்டனையை ஒப்புக் கொள்வதில்லை. "எதிரிகள் நம் வீரர்களைக் கொன்று குவிப்பது காணாது என்று நாமுமா இத்திருவிளையாடல் புரியவேண்டும்" என்று எடுத்துக் கூறி எமன் வாயிலிருந்து மீட்டுக் கொடுக்க வேண்டியது ஏற்பட்டது. அளவுக்கு மீறித் தலைவர் தலையிடும் இக்காரணத்தால் ‘பட்டாள ஒழுங்கு பாதிக்கப்படுகின்றது' என்று தளபதியர் ஆங்காங்கே எதிர்ப்புக் குரல் எழுப்பிக் கொண்டிருந்தனர். "இறைவனிடம் அருள்வேண்டி மண்டிக் கிடக்கும் நாம் மற்றவர்களுக்கும் அருள