உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

ஐக்கியம் ஓங்குக

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

“எத்தனை எத்தனை பக்கங்களில் எதிர்ப்புக்கணை வந்தாலும் சரி, அதைப் பற்றிக் கவலை இல்லை. எம் பெருமை, மரியாதை காக்கப்பட வேண்டும் என்பதல்ல எம் நோக்கம். எம் தாயக ஐக்கியம் காக்கப்படவேண்டும். ஐக்கியம் காக்கத் தகுதியானவன் கிராண்டு தான். அவனே தளபதி! எனக்கு ஆகாதவன் என்பதற்காக வீரனை அலட்சியம் செய்துவிட முடியாது" என்று முடிவு கட்டுகின்றார். அப்படியே கிராண்டைத் தளபதியாக்கி விடுகின்றார். இரண்டாம் தேர்தல்

66

இந்நிலைமையிலே குறுக்கிடுகின்றது இரண்டாம் தேர்தல். 'அரசியலை விட்டு ஒதுங்கி விடலாம்; ஆனால் ஐக்கியம் காக்கப்பட வேண்டும்" என்ற இரண்டு சிக்கல்களுக்கும் இடையேயும் தத்தளிக் கின்றார் லிங்கன்.

பக்கம்;

"வேலையில்லை வேலையில்லை" என்ற வேண்டுதல் ஒரு

"உணவும் படையும் தேவை" என ஓலம் ஒரு பக்கம்; "தளபதியை நீக்கு; தட்டிக் கழிக்காதே" என்ற தாக்குதல்

ஒருபக்கம்;

"ஐக்கியம் காக்கப்பட வேண்டுமே" என்ற உள்ளத்தின் அபயம் ஒருபக்கம். இத்தனைக்கும் சரி சொல்லியே தீரவேண்டும். விடுதலைக் கோரிக்கையும் நிறைவேற்றியே யாகவேண்டும். இவற்றை எண்ணி மறுமுறையும் தேர்தலில் நிற்கின்றார்.

தேர்தலிலே வெற்றி! ஆபிரகாம் குரங்குப் பிடியாய்க் கிராண்டை நம்பியதும் பழுது படவில்லை. தோல்வி சில இடங்களில், வெற்றி பல இடங்களில். எதிர்ப்பணியினரைப் பார்க்கிலும் ஐக்கிய அணியினர்க்குச் சேதாரம் கம்மி! ஆயினும் எதிர்ப்பணியினரும் படையைக் குவித்த வண்ணம் இருக்கின்றனர். விடுதலை முழக்கம்

"எளிதிலே வெற்றி பெற வேண்டுமா? எம்மிதயம் கூறுவது இவ்வழிதான்! நாளை நடத்தியே தீர்வேன். ஒரு செயல்; இரண்டு பக்கங்களில் வெற்றி" என்று முடிவு கட்டிவிட்டார் லிங்கன். "செயலாளரே! இதய பூர்வமாக இச் சாசனத்தில் கையெழுத் திடப்