உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

தராதும் தான் ஐக்கியம் காக்கப்பட வேண்டுமென்றாலும் அப்படியே செய்வேன்" என்று முன் பொருநாள் முழக்கிய மூன்று வழிகளிலே முதல் வழியே சரியான தென முடிவு கண்டார். செயலிலே இறங்கினார்.

"அடிமையர் அனைவருக்கும் எப்பகுதியிலும் விடுதலை; இப்பொழுது நடக்கும் போர் அடிமை ஒழிப்புப் போர்- பறையறையப் படுகின்றது இப்படி. தென்காலனியிலிருந்து கிளம்புகின்றது அடிமையர் பட்டாளம். எங்கே? வடகாலனியில் சேர! உரிமை தந்த உத்தமனுக்குப் பெருமை தேடித்தர!

வெற்றி!

நீக்ரோ வீரர் குவிந்தனர் போருக்கு; கிராண்ட் கொதித் தெழுந்தான். எதிர்த்து நிற்க முடியவில்லை எதிரிகளால். எதிர்ப்பணிப் பெருங்கோட்டையான ரிச் மாண்டிலே முற்றுகை! வீரன் கிராண்டினிடம் அபயம் அடைவது அன்றி வேறு வழி அறியா 'லீ அப்படியே செய்தார். 1863 ஆம் ஆண்டு ஜுன் 7ஆம் நாள் வெற்றி முழக்கம் விண்ணைப் பிளந்தது.

.

“வீரன் கிராண்ட் வாழ்க" "லிங்கன் வாழ்க” “ஐக்கியம் காப்போம்" என மூலைமுடுக்குகளிலெல்லாம் கிளம்புகின்றது முழக்கம். ஆயினும் வெள்ளை மாளிகை மட்டும் அமைதியாக இருந்தது.'