உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள் நெஞ்சம்

7. வாழ்க வில்கி பூத்

வெளியே மகிழ்ச்சியும் கொண்டாட்டமுமாக இருக்கும் போது வெள்ளை மாளிகைமட்டும் ஏன் அமைதியாக இருந்தது? வெற்றிகண்டும் கவலையா? வெற்றிகண்டும் கவலைதான்! வெள்ளை மாளிகைக் கல்ல! வெள்ளை மாளிகையின் உள்ளே இருந்த வள்ளல் லிங்கனுக்கு.

"யாரை வென்றேன்? ஓரினம்; ஒருகுடி; ஒருநாடு இத்தகு மக்களைக் கொன்று கூத்தாடும் ஈவிரக்கமற்ற இச் செயலுக்கு வெற்றி என்றா பெயர்?

(C

"அன்புப் பலத்தையே நம்பி வாழ்ந்து வந்த நான் ஆயுதபலம் தாங்கி யாரை அழித்தேன்? ஆவிபோகும் வரை அயராது உழைத்து வாழ்வையும் வளத்தையும் ஆக்க வந்த அஞ்சா நெஞ்சக் காளை களையல்லவா அழித்தேன்?"

"நானா அமைதி காத்தவன்? நானா அறம் காத்தவன்? நானா அருளுள்ளம் படைத்தவன்? ஐயோ! அமைதியையும் ஐக்கியத்தையும் காப்பதற்குத் தலைவனாக வந்தேனா? அழித்துக் குவித்துவிட்டு அலறிக் கிடக்கத்தான் வந்தேனா?

"இரத்தத்தால்தான் நம் ஐக்கியம் எழுதப்பட வேண்டுமா? அடிமையர் ஒழிப்பு அமரால்தான் ஆக வேண்டுமா? பல லட்சம் மக்களுக்கு விடுதலை தரச் செய்த முயற்சியிலே சில லட்ச மக்கள் காலனுலகில் சரணடைந்து விட்டனரே!"

(C

"அவர்களாகவா மடிந்தனர்? அந்த உயிர் போகும் போது எத்தனை எண்ணியதோ? என்னென்ன பாடுபட்டதோ? காலும் கையும் கண்ணும் தலையும் இழந்த முண்டம் இன்று என்னைப் பார்த்துப் பேசுவதாக இருந்தால் என்ன பேசும்? இவ்வளவு சேதாரமும் காணாது என்று பகைவனுக் கருளும் நன்னெஞ்ச மின்றிச் சரணடைந்தவர்களுக்கும் சாவுப் பாதை காட்ட வேண்டுவது பட்டாள நெறியாம்! அரசியல் தற்காப்பாம்!