உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

"செத்தவர்களுக்காகச் சாகாதவர்களையும் சாகடிக்கும் இந்தக் கொடுமை நீக்ரோவரை அடிமையாக்கி அந்த ஆதிச் சுயநலக்காரர்களின் செயலைப் பார்க்கிலும் கொடுமை என் இலட்சியம் பழிவாங்குவது அல்ல! பரிவுகாட்டுவது" என்று குத்திக் குத்தித் தின்னுகிறது எண்ணம் என்னும் குடை மூக்குக் கழுகு. எங்கே அமைதி இருக்கமுடியும்?

66

"நான் செய்ய வேண்டிய இந்தக் காரியத்தில் நாழிகை தவறினாலும் நாசம்தான்" -"மதிப்புள்ள கிராண்ட், நீக்ரோ இனத்தவருக்கு விடுதலைப் பட்டயம் செய்து நான் முடிக்க வேண்டிய பணியை முடித்துவிட்டேன். உன்னடி பணிந்து ஊஞ்சலாடித் தவிக்கும் தென் காலனி வீரர்களுக்கு நிபந்தனை எதுவுமின்றி விடுதலை தரும் பெருமைச் செயலைச் செய்து முடிக்க உனக்கு வாய்ப்புத் தருகின்றேன். அப்படியே செய்! அதுவே ஆண்டவன் விருப்பம். அருள் கொழிக்க வேண்டிய அமெரிக்காவிலே அடிமையராக எவருமே இருக்கக்கூடாது என்று உத்தரவிட்டு விட்டார்.

15

"சர்வதிகாரம் படைத்திருந்தும் அதை அமைதிக்கன்றிப் பிற வழிகளுக்குப் பயன்படுத்தாத ஒரே ஒரு மனிதன் இக் கல்லறையிலே நிம்மதியாகத் தூங்குகின்றான்" என்று லிங்கன் கல்லறையிலே எழுத வேண்டும் என்று பல்லாண்டுகள் கழித்து ஒருவன் கூறியிருக்கின்றான் என்றால் அதற்குக் காரணம் பகைவனையும் மன்னிக்கும் பண்பு லிங்கனிடம் இருந்ததேதான்.

எதிரிகளை விடுதலை செய்த பின்னும் என்ன! "பாலையைச் சோலையாக்க வேண்டுமே; மாண்டவர் குடியை மீண்டும் எழுப்ப வேண்டுமே. இடிந்த வீடு சரிந்த கோட்டை சிதைந்த நகரம் மறைந்த செல்வம் - இவற்றை யெல்லாம் பழையபடி ஆக்குவது எப்படி? மக்கள் துயரைப் போக்குவது எப்படி?

“அடாத செயல் செய்த ஒருவனை அடித்துவிட்டு அவனக்கு மருந்து கட்டி அனுப்பிய என் இளமைச் செயல்போலாக அல்லவா, இன்று அமெரிக்காவின் மார்பைப் பிளந்து மருத்துவமும் பார்க்கத் தொடங்கியிருக்கின்றேன்" என்று செந்நீர் கொட்ட முட்டி மோதிக் கொள்கின்றது வெள்ளைமாளிகை உருவம்.

அன்பினர் முயன்றனர் அவலம் போக்க!

மேரி முயற்சி மிக தோல்வியிலே முடிந்தது. லிங்கன் நினை வெல்லாம் நாட்டின் வருங்காலம் பற்றியே இருந்தது.