உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைநாடகமா?

அண்ணல் ஆபிரகாம்

63

இந்நிலையிலே வெற்றிவிழாவுக்காக நாடகம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கவலையனைத்தும் போக்கி வெற்றிக் களிப்பிலே திரிய நாடகக்கலை தக்கது என முடிவு கட்டியிருந்தனர். களப்பலி கொடுத்துவிட்டுக் களிப்பாகத் திரிதலை விரும்பாத லிங்கன் நாடகத்திற்கு வர மறுத்துவிட்டார். தலைவர் மன நிலையை மாற்றி அமைப்பதற்காகவே அன்பினரால் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த அந்த நாடகத்திற்கு வர ஆபிரகாம் மறுத்தாலும் விட்டுவிடவில்லை. "மக்கள் தங்கள் வருகையை எதிர்பார்க் கின்றனர்; அவர்களுக்காகத் தாங்கள் வரத்தான் வேண்டும் என்று வற்புறுத்தினர். அன்புத் தொல்லைக்கு ஆட்பட்ட லிங்கன் மறுக்க முடியாதவராய் மேரியுடன் "தலைவிதியே" என்று நொந்து கொண்டு காட்சி மேடைக்குச் சென்றார்.

தலைவர் வந்துவிட்டார் என்று தாங்கா மகிழ்ச்சியுற்றனர் மக்கள். "வெள்ளையர் கறுப்பர் பேதம் போக்கிய வள்ளலே, தென்னாட்டவர் வடநாட்டவர் பகை நீக்கிய தீரரே, ஐக்கிய அமைப்பைக் காத்த அண்ணலே வருக வருக" என்று ஆரவாரித்தனர். காட்சி தொடக்கமாகியது. நாடகம் நடந்து கொண்டிருக்கின்றது.” கொலை நாடகம்

வேறொரு பக்கம் நடந்துகொண்டிருக்கின்றது தலைவரைக் காணவேண்டுமென்று தளர் நடையோடு ஓர் உருவம். காட்சிக்கு எளியராம் லிங்கன் தடை எதுவுமின்றி உள்ளே வர விட்டார். வந்தவன் லிங்கனால் அடையாளம் தெரியப்பட்டவன் அல்லன். அமைதியாக வணங்கினான். அதற்குமேல் - "டபார்" என்றஒரே ஒரு பேரிரைச்சல். இடையே வரும் நாடகக் காட்சியென ஏதுமறியா மக்கள் எண்ணுகின்றனர். அரசியல் தலைவர்களுக்கு அதிர்ச்சி! ஏன் அந்தச் சத்தம்? எங்கே எங்கே?..

மக்களிலே ஏற்றத் தாழ்வு காணாத மனித மேதையின் மண்டை யோட்டைத் துளைத்த மரத்துப் போன துப்பாக்கிக் குண்டின் சத்தமே "டபார்"

தனியொருவராய்ப் பிறந்து இலட்ச லட்சம் மக்களுக்குத் தந்தையாகச் சிறந்த அந்தப் புனிதர் தலையைப் பதம்பார்த்த குண்டொலிதான் “டபார்"