உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

'பிறந்த பொன்னாட்டைப் பிளவுக்கு விடமாட்டேன்' என்ற பெரியவருக்குக் கிடைத்த பெரும் பரிசுதான் "டபார்"

ஊழி ஊழி காலமெல்லாம் உலகத்தவர் உள்ளத்து உறையும் அருளாளர் ஆபிரகாம் கல்லறையிலே அடக்கம் செய்யப்பட்டார். எடுத்துக்காட்டாக உலகுக்கு வந்த உத்தமர் விடை பெற்றுக் கொண்டு விட்டார். ஆண்டான் அடிமை பேதமற்று, வெள்ளையர் கறுப்பர் பேதமற்று மொய்த்து விட்டனர்; கல்லறையிலே; "அழுகின்றார்; தொழுகின்றார்; அன்றி அயலொன்றறியார்'

"அந்தோ! அருமைத் திருவுடலே, அருளின் பிறப்பிடமே அவிந்துவிட்டாயே ஏன்? அடங்கிவிட்டாயே ஏன்?

"கருணை வழியும் கண்ணே! கடமை தவறாக்கரமே! சுருங்கி விட்டாயே ஏன்? சோர்ந்து விட்டாயே ஏன்?

"நீதிக்குப் புறம்பாகா நெஞ்சமே! வாதிக்கும் திறம் படைத்த வன்மையே! வேதைக்கு ஆளானாயே விடிவுக்கு ஆளானாயே!

"அகிலத்தின் ஆரிருளை அகற்ற வந்த ஆதவனே! சோதிச் சுடரொளியே! எங்கள் குலத்திங்களே! அடங்கி விட்டாயே, அனைவர் வாழ்வையும் அடக்கி விட்டாயே!

"தொண்டுச் செயல் செய்த தூயவனே! தூய பரிசு ஏற்று விட்டாய்! தொலையாத பரிசு ஏற்றுவிட்டாய்!"

(C

'அன்பு முகம் காட்டி ஆர்வமது ஊட்டும் நின்னைக் கண்டும் நீட்டினானே துப்பாக்கி! அம்மவோ! நெஞ்சமென்ன இரும்பா?

"குற்றம் செய்து விட்டாய் குணக்கடலே குற்றம் செய்து விட்டாய். அளவு கடந்து நல்லவனாக, இவ்வகிலத்தே பிறந்து குற்றம் செய்து விட்டாய்" என்று அழுதனர் அரற்றினர்; வெதும்பினர் விழுந்தனர்; புழுங்கினர் புரண்டனர்; நடுங்கினர் நைந்தனர்.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறைகூட அகிலத்துத் தோன்றாத அரும் பெரும் தலைவரை ஒரு குண்டு பதம் பார்த்து விட்டது. அணுக்குண்டினும் கொடிது ஆபிரகாமைத் துளைத்த குண்டு. உலகத்தின் ஒரு கோடியிலே விழுந்தால் மறு கோடி வரைதாக்கும் அணுக்குண்டும் ஆபிரகாமைத் துளைத்த குண்டினும் ளைத்ததுதான்.

அணுக் குண்டின் விளைவுக்காக அனுதினமும் கோடானு கோடிப் பேர் அழுகின்றனரா? ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு