உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணல் ஆபிரகாம்

65

அழுவரா? உலக வரலாற்றிலே நீங்காத வடுவை ஏற்படுத்தி விட்டது லிங்கனைத் துளைத்த குண்டு.

எளிதில் மலராத மலர்

நீக்ரோவர் உள்ளத்தே நீங்காத இருள் கப்பிக் கொண்டது. அவர்கள் குடிசையைக் கோரப்புயல் பிரிக்க ஆரம்பித்தது. எங்கெங்கும் சாக்காட்டு ஒலி! இவ்வளவும் என்ன செய்தன? அத்தனை பேர் கண்ணீரும் ஐயன் கண்களை விழிக்கச் செய்யச் சக்தியற்றதாகப் போய்விட்டது. துக்கச் செய்தி கேட்டவுடனே செந்நீர் வடித்தவர் உண்டு; செத்தவர்களும் உண்டு; இவையும் லிங்கனை மீட்டும் எழுப்பி விட்டு விடவில்லை. எளிதில் மலராத அந்த மலர் குவிந்து கொண்டுவிட்டது.

இளகிய மனத்தவர் ஏக்கத்திலே இருந்தாலும் இரும்பு மனம் படைத்தவர் கவலையிலே கடமையை மறந்து விடவில்லை. காடு செடி தேடி, துப்பாக்கி தூக்கித் துணிகரச் செயல் செய்தவனைப் பிய்த்து எடுத்து விட்டனர்; நார் நாராய்ப் பிடுங்கி விட்டனர். பழிகாரன் பூத்

கலையால் களிப்பூட்டி வந்தான் அவன்.அருளாளர் ஆபிரகாம் பார்க்க வந்த நாடகத்தில் முக்கிய பாகம் ஏற்றிருந்தவன்தான்! ‘வில்கிபூத்' என்னும் பெயர் தாங்கியிருந்தான். கலையால் கொலை செய்தான்! கலைக்கே இழுக்குத் தேடி விட்டான்! “தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்" என்னும் தூயோரின் வாக்குக்கு இலக்காகி விட்டான்.உலகுள்ளளவும் நீங்காப் பழியேற்று விட்டான். அவனை வைய எழும்புகிறது உள்ளம்! வள்ளல் ஆபிரகாம் பண்பு வில்கிபூத்தை வாழ்த்தச் சொல்கின்றது.

இன்று, வானளாவ உயர்ந்து நிற்கும் நீக்ரோவர் தந்தையின் நினைவுச் சிலையைக் கண்டு கண்ணீர் சொரிந்து, வாய்குழறி, உள்ள மொடுங்கி, ஊசலாடும் திரள் திரளான மக்களை எண்ணு வோமாயின்,

“வாழ்க வறுமை வாழ்க்கை!”

“வாழ்க அடிமை வாணிகம்!”

“வாழ்க வில்கி பூத்!”

என்று வாழ்த்தவே தோன்றுகிறது.