உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுள் தூதர்

CC

அண்ணல் ஆபிரகாம்

67

லிங்கன் பண்புடைமையைக் கண்ணாகக் காத்து வருவதை அறிந்த நல்லோர் பலர் "கடவுள் தூதர்" என்று எண்ணுவாரா யினர். நேரடியாகவும் மறைவாகவும் பாராட்டிப் புகழ்வதும் வழக்கில் வரலாயிற்று. "எல்லாம் வல்ல இறைவனும் எங்கள் தலைவர் லிங்கனும் இந்நாட்டை இனி னிது காத்து வருவார்கள் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை உண்டு" என்று முதியர் ஒருவர் லிங்கனை நேரடியாகப் பாராட்டினார். லிங்கன் அமைதியாக 'ஐயா, தாங்கள் கூறுவதிலே பாதியளவே உண்மை இருக்கின்றது. இறைவனே காத்துவருவதாகக் கூறியிருப்பின் முழுவதும் சரியாக இருந்திருக்கும்" என்று மொழிந்தார். தம்மைத் “தேவ தூதர்" என எவரேனும் கூறினால் தமக்குள்ளாகவே வருந்திக் கொண்டார். தம்மிடம் “தெய்வ ஒளி” ஒன்றும் இல்லையென்று கூறிக்கொண்டே இருந்த போதிலும் இன்று அமெரிக்காவிலே திருமறைக்கு அடுத்த நிலைமையிலே வைத்து லிங்கன் பொன்னெழுத்துக்கள் போற்றப் படுகின்றன. நீக்ரோவர் அனைவரும் தமக்குக் கிட்டும் பொருள், புகழ், பட்டம், பதவி அனைத்தும் தந்த ஆண்டவன் தூதர் ஆபிரகாமே என்று பாராட்டுகின்றனர். லிங்கன் இருக்கும் பொழுது தம்மைப் பாராட்டுவதைத் தடுத்தார். இனி அவரால் என்ன செய்ய முடியும்?

பணிவுடைமை

  • CC

இறையன்பிலே திளைத்த லிங்கனுக்கு இயற்கையாகவே பணிவுடைமை நிறைந்திருந்தது. ஏழ்மையிலே கொண்டிருந்த பணிவுடைமையினும் ஏற்றமுற்ற நேரத்தே மிகுதியாகக் கொண்டிருந்தார் 'அனைவருக்கும் பணிவுடைமை அணிகல மாக இருப்பினும் பெருஞ் செல்வரிடத்தே பணிவு சேர்வதே செல்வத்துள் செல்வமாகும்" என்னும் தமிழ்மறைக்கு எடுத்துக் காட்டாக இலங்கினார். தம்மிடம் பணியாற்றும் அதிகாரிகளை யும் அளவிறந்த மரியாதையோடு நடத்தினார். அவர்களிடம் அன்பு குழையப் பேசினார். அவர்கள் இருக்கும் இடம் தேடிச் சென்று அமைதியுடன் பார்த்துவந்தார். தாம் தலைவர் என்னும் தன்னெடுப்பு தலைதூக்கும்படி இருந்ததில்லை. "தலைவரவர் களே" என்று எவரேனும் அழைத்தாலும் "ஆபிரகாம் என்று

  • எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்

செல்வர்க்கே செல்வம் தகைத்து.

(குறள்)