உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

அழையுங்கள்" என்று பணிவுடன் வேண்டிக் கொண்டார். அதிகாரிகளுக்கு அன்புடன் ஆலோசனை போலாக எதையும் கூறுவாரே யன்றி அரசியல் முறைக்கேற்ப உத்தரவிட விரும்ப மாட்டார். பிறர் வணங்கும் பொழுதெல்லாம் அவர்களினும் தாழ்ந்து வணங்கும் ம் கடப்பாட்டையே காலமெல்லாம் கொண்டிருந்தார்.

லிங்கன் ஒருசமயம் குதிரையிலேறி விரைவாகச் சென்று கொண்டிருந்தார். எதிரே வந்த ஏழை ஒருவர் லிங்கனைக் கண்டவுடன் தொப்பியை எடுத்து, பணிவோடு நின்று வணக்க மிட்டார். லிங்கனும் குதிரையை விட்டுக் கீழே குதித்து, தம் தொப்பியையும் எடுத்து, தலைதாழ்த்தி ஏழை வணங்கிய ணக்கத்தினும் தாழ்ந்து வணங்கினார். உடன் வந்த செல்வருக்கு இது வெறுப் பூட்டும் நிகழ்ச்சியாக இருந்தது. அதனால் "இந்த ஏழைக்காக நீங்கள் இவ்வளவு தாழ்ந்து வணங்க வேண்டுமா? என்று செருக்குடன் வினவினார். லிங்கனோ, 'ஐயா, என்னை இவர் பணிவுடைமையால் வென்று விடும்படி விட்டுக் கொடுக்க நான் விரும்பவில்லை" என்று விளக்கினார் பாவம்! பதவியில் தலைமையுடையவர் பணிவுடைமையிலும் தலைவராக இருக்க வேண்டும் என்ற லிங்கன் பண்புடைமையை அவர் அறிந்திருக்க வேண்டுமல்லவா!

எளிமை

உணவிலும் உடையிலும் எளிமை கண்டார் உத்தமர் லிங்கன். எளிமையில் தான் இன்பம்இருக்கிறது என்பதில் எள்ளளவும் அவருக்கு ஐயம் இருந்தது இல்லை. மேரி பகட்டுடை அணிந்து கொள்ளும்போது கேலி பண்ணுவார். அவளோ, ஆபிரகாம் எளிய வாழ்வைக் கண்டு கிண்டல் பண்ணுவாள். பற்பல சமயங்களில் தன் கணவர் இப்படிப் பைத்தியக்காரராக இருக்கிறாரே என்று வாழ்க்கைப்பட்ட குற்றத்திற்காகத் தன்னையே வைதுகொண்டதும் உண்டு. விருந்து வேடிக்கை இவற்றில் லிங்கனுக்கு விருப்பு இருப்பதே இல்லை. அன்புத் தொல்லைக்கு ஆட்பட்டு எந்த வேடிக்கை நிகழ்ச்சியிலாவது கலந்து கொண்டாலும் ஒரு மூலையில் உட்கார்ந்து உலகத்தவர் அனைவரின் சிந்தனையும் உருக் கொண்டால் போல் இருப்பார். அல்லது கவலைக் கடலாய்க்

காட்சியளிப்பார்.

எவர் தம்மைப் பார்க்க விரும்பினாலும் எளிதில் அனுமதி யளிப்பார்.தாமே மாளிகையின் முன்வாயில் வரை சென்று