உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணல் ஆபிரகாம்

69

வரவேற்று மீண்டும் வாயில்வரை போய் வழியனுப்பி வருவார். தமக்காகப் பாதுகாப்போ பரிவாரமோ வைத்துக் கொள்ள விரும்பவில்லை. கடிதங்களைத் தம் கையால் எழுது வதையே பெரிதும் விரும்பினார். நண்பர்களிடம் சமயம் வாய்க்கும் பொழுதெல்லாம் தம் வாழ்க்கையையும் வறுமையையும் எடுத்துக் கூறுவார். பழைய ஏழ்மை நிலைமையை எடுத்துக் கூறுவதில் எத்தகைய இழுக்கும் இல்லை என்று நம்பினார்.

தமது சோடுகளைத் தாமே சுத்தம் செய்து கொண்டார். இழிதொழில் என்று எதையேனும் கருதும் எண்ணம் லிங்கனிடம் ருந்ததே இல்லை. ஒரு சமயம் வெள்ளை மாளிகைக் குள்ளே தம் சோடுகளைச் சுத்தம் செய்து கொண்டிருந்தார் லிங்கன். நண்பர் ஒருவர் “நீங்களே உங்கள் சோடுகளைத் துடைத்துக்கொள்கின்றீர்களே" என்று புன்முறுவலுக்கிடையே கேட்டார். "அப்படியானால் நான் யாருடைய சோடுகளைத் துடைக்க வேண்டுமென்று விரும்பு கிறீர்கள்" என்று பதில் மொழிந்து வாயை அடக்கினார்.தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பும், பசுவுக்குத் தீனிவைத்திருக்கிறார்; பால் கறந்திருக்கிறார்; விறகு வெட்டியிருக்கிறார். தொழிலிலே ஏற்றத் தாழ்வு காணாத தூய வாழ்க்கை லிங்கன் வாழ்க்கையாக ருந்தது.

ஒப்ப மதிக்கும் உயர்வு

தொழிலில் ஏற்றத் தாழ்வு காண்பதை வெறுத்த லிங்கனிடம் நிறத்தால் ஏற்றத்தாழ்வு காண்பது கொடுமை என்னும் எண்ணமும் செறிந்திருந்தது. நிறபேதத்தை ஒழிப்பதற்காகவே தம் வாழ்வை யெல்லாம் ஒப்படைத்திருந்ததை அவர் வரலாற்றின் எந்த மூலையும் காட்டிக்கொண்டுதான் இருக்கின்றது. அவர் நினைவுச் சின்னமாக வாசிங்டனில் பளிக்கு மண்டபத்தே எழுப்பியிருக்கும் பேருருவம் முதலாக பென்னி நாணத்தின் சிற்றுருவம் ஈறாக அனைத்தும் நிறபேதம் ஒழித்த அறத்தையே அகிலத்திற்கு அறிவிப்புச் செய்த வண்ணமாக இருக்கின்றன.

குறிக்கோள்

லிங்கன் ஒருநாள் நெடுநேரம் வரை நண்பர் ஒருவரிடம் அடிமை ஒழிப்புப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார். அதற்கு மேல் நண்பர் அயர்ந்து தூங்கி விட்டார். லிங்கனோ உட்கார்ந்து விடியு மளவும் சிந்தித்துக் கொண்டே இருந்தார். நண்பர் விழித்தெழுந்தவுடன் “அன்பரே! அரைவாசிப் பேருக்குச் சுதந்திரம் அளித்துவிட்டு அரைவாசிப் பேரை அடிமையாக வைத்திருக்கும்