உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

களங்கத்தை அனுமதிக்கவே முடியாது" என்றார் ஆபிரகாம். "நீங்கள் இரவெல்லாம் தூங்கவே இல்லையா?" என்று பதில் கேள்விதான் நண்பரால் கேட்க முடிந்தது.

குறிக்கோளொன்று வெற்றியுற முழு மூச்சாகப் பாடுபட்டால் மட்டும் போதாது. தன்னளவில் அணுவும் ஐயமுறாது விடாப் பிடியோடு கடைப்பிடிக்க வேண்டும். உள்ளொன்றும் புற மொன்றும் கொண்டுறைவோர் குறிக்கோள் சின்னாட்களிலே சிதைந்து போவதை உலகியல் காட்டிக் கொண்டிருக்கின்றது. உலகியலாராய்வு மிக்க லிங்கன் கொண்ட கொள்கையை நிறைவேற்ற, குரங்குப் பிடியினராக வாழ்வெல்லாம் இருந்து வந்தார். "ஏழையடிமையர்க்காக வாதாடுவது இழுக்கு" என்பது வழக்கறிஞர்கள் கொள்கையாக, வலிய வந்து அடிமையர்க்காக வாதாடினார்.அடிமையரோடு அளவளாவிப் பழகினார். ஒருமுறை நீக்ரோவர் ஒருவரைச் சந்தித்து நீண்ட நேரம் உரையாடினார் லிங்கன். அந் நீக்ரோவர் "அளவிறந்த நேரம் பேசிக் கொண்டிருந் தாலும் நான் ஒர் அடிமை நீக்ரோ என்பதை என்னிடம் நினைவூட்டாது பேசிக்கொண்டிருந்த ஒரே ஒரு வெள்ளையர் லிங்கனே" என்கின்றார். என்னே லிங்கனின் பண்புடைமை!

சொல்வன்மை

லிங்கனின் குறிக்கோள் வெற்றியுற்றமைக்குப் பெருங் காரணமாக இருந்தது சொல்வன்மையே. சொற்போர் வல்லாளரான டக்ளஸே எதிர் நிற்பதற்கு அஞ்சும் சொல்லாற்றல் லிங்கனிடம் இருந்தது. சொற்பொழிவால் சம்பாதித்து வாழ்க்கை நடத்தினும் நடத்தலாம் என்ற எண்ணம் கூட ஒருசமயம் எழுந்த துண்டு. சொல்வன்மையினாலே தீரா வழக்குகளையும் தீர்த்து வைத்ததை முன்னர் அறிந்துள்ளோம். லிங்கன் பேசுவதைக் கேட்க, அறியார் முதல் அறிஞர் வரை கூடுவர். நகைச்சுவை நிரம்பப் பெய்யப் பட்டிருக்கும் லிங்கன் பேச்சிலே.

"உங்கள் பாட்டனார் எத்தகையர்' என்று லிங்கனிடம் ஒருவர்கேள்வி கேட்டார். "என் பாட்டனார்எத்தகையராக இருந்தார் என்பது பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால் அவர் பேரன் எத்தகையனாக இருக்க வேண்டும் என்பது பற்றியே எனக்குக் கவலையாக இருக்கின்றது" என்று மடக்கினார். "லிங்கன் மது விற்பனைக்காரர்" என்று டக்ளஸ் தம் வாதத்தின் போது லிங்கனைக் குறை கூறினார். "நண்பர் டக்ளஸ் கூறுவது உண்மையே! நான் மது விற்பனை செய்து கொண்டிருந்த போது டக்ளஸ்