உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

CC

அண்ணல் ஆபிரகாம்

71

பன்முறை மதுக் கடைக்கு வந்து மது வருந்துவார். நான் இப்பொழுது மதுவிற்பனையை விட்டுவிட்டேன்." ஆனால் நண்பரோ இன்னும் விடாப்பிடியினராக இருக்கின்றார்" என்று மூச்சுத் திணறச் சொல்லடி வைத்தார். அடிமை முறையை ஒழித்துக்கட்ட இறைவன் தம்மிடம் திருவருள் செய்ததாகக் கூறிய ஒருவரிடம் "இறைவன் நான் செய்யவேண்டிய காரியத்திற்கு என்னிடமே திருவருள் செய்ததாகக் கூறிய ஒருவரிடம் "இறைவன் நான் செய்யவேண்டிய காரியத்திற்கு என்னிடமே திருவருள் செய்யாது தங்கள் வழியாக அனுப்பி வைக்க மாட்டான்" என்று வாய் பேசாப் பதுமையாக்கினார். விடுதலைப் பிரகடனம் செய்விக்க வற்புறுத்திய சிலரிடம் "விடுதலை எழுத்திலே இல்லை; நாம் விட்டுக்கொடுப்பதிலே தான் இருக்கின்றது" என்று கூறிவிட்டு ஆட்டுக்குட்டியின் வாலையும் கால்களோடு சேர்த்துக் கொண்டார்" என்றார். கணக்குப் புலிகளான அவர்கள்" ஐந்து" என்று அறுதியிட்டார்கள். லிங்கனோ, “வால் வாலாகுமே யன்றிக் காலாகுமா? ஆகாதது போல எழுத்து விடுதலையும் உண்மை விடுதலையாகாது" என்று விளக்கினார். சொல்வன்மையும் சோர் வின்மையும் கொண்டிருந்ததால் லிங்கனுக்கு வில்வன்மை தேவை

யற்றதாகப் போய்விட்டது. லிங்கன் கொண்டிருந்த சொல்லெல்லாம்

கொல்லும் சொல்லல்ல; வெல்லும் சொல்.

நற்பண்புகள்

இவையேயன்றி "நன்றி மறப்பது நன்றன்று" என்னும் பொன்னெறி போற்றிக் காத்து வந்தார் லிங்கன். "பாம்பின் பற்களைவிட நன்றிகெட்டவரின் நாக்கு கொடிது” என்பது அவர் பொன்னுரை. தமக்குச் சிறு உபகாரம் பண்ணியவர்களையும் சமயம் ஏற்படும் பொழுதெல்லாம் பாராட்டிப் பணமும் தந்தார். செய்யும் உதவியெல்லாம் செய்தார். தாம் முன்னுக்கு வரக் காரணமாக இருந்தவர்களுக்கு இதயத்தே பெருமளவில் இடம் ஒதுக்கினார். பொறுமைக் குணத்திற்கு லிங்கன் கிடைத்தற்கரிய எடுத்துக்காட்டு. உணர்ச்சியற்ற பிண்டம் போலாக இருப்பார், பிறர்பழிக்கும் போதும் தொல்லை தரும் போதும். ஆனால் கோழை என்று கூறிவிடமட்டும் எவரையும் அனுமதிக்க மாட்டார். அடிக்கீழ் இருந்த அதிகாரிகள் அவமதித்துக் கொண்டிருந்த போதும் பொறுத்தார். அவர்களைச் சந்திக்கவீடு தேடிப் போய், கால்கடுக்க வெளியே நின்றதுமுண்டு. "பொறுத்தால் பெருமை சிறுத்து விடும்' என்ற எண்ணம் லிங்கனிடம் துளியும் இருந்த தில்லை. வாழ்வெல்லாம் இன்சொல் கூறினார்.”இனிய சொல்லை