உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

று

விரும்புபவன் ஏன் இன்னாச் சொல்லைக் கூறவேண்டும்?" என்று வினயமாய்க் கேட்பார். மக்களே அன்றி மற்ற உயிர்களும் இன்னலுற லிங்கன் பொறுத்துக் கொள்ள மாட்டார். விரோதிகளென் வேலை நீக்கம் புரிந்துவிடவில்லை. தூற்றியவர்களென்று துச்சமாக மதித்ததும் இல்லை. தம்மிடம் தவறொன்று இருக்குமாயின் உரியவரிடம் மன்னிப்புக் கேட்கத் தவற மாட்டார். கற்றதையும் கற்றபடி நிற்பதையும் காலமெல்லாம் கொண்டிருந்தார். நல்லவர்கள் எப்பொழுதும் லிங்கனைச் சுற்றியிருப்பர். நல்லவர்கள் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் நட்பினராக்கிக் கொள்வார். நல்ல புத்தகங்கள் எவ்வளவு தூரத்தே இருந்தாலும் பெற்று வந்து நெஞ்சத்தே நிறுத்திக் கொள்வார். "நல்ல புத்தகங்கள் தேடித் தருபவர் எவரோ அவரே நண்பர்" என்று சொல்வார். நண்பர் பலர் இருந்துங்கூட லிங்கனின் ஆசைதீர அவர்களால் புத்தகம் சேகரித்துத் தர முடியவில்லை. அவ்வளவு தூரம் படிப்பார்வம் லிங்கனை வாட்டியது.

புகழ் வாழ்வு

"பிறக்கின்றார்கள்; பின்னர் இறக்கின்றார்கள். பிறந்தவர்கள் எவ்வழியிலாவது சிறந்திருந்தார்களா? சரித்திரத்தில் என்றும் அகலாத ஓரிடத்தைப் பெற்றார்களா?" என்று தம்மைத் தாமே கேட்டுக் கொண்டார் லிங்கன். இந்த அடிப்படைக் கேள்வி அகிலத்தின் கடைசி மனித வாழ்க்கை வரைக்கும் நிற்கும் பெருமை தேடித் தந்துவிட்டது. "வாழ்ந்தால் போதாது; பிறர் வாழ்வதற் காகவும் வாழ வேண்டும்" என்றார். பிறருக்காகவே வாழ்ந்தார். அதனால் பிறருள்ளத்தே வாழ்கின்றார்; வளரவும் செய்கின்றார்.

லிங்கனுடைய உயர்ந்த பண்புகளே அவரை உயர்நிலைக்கு ஆக்கிவைத்தன. எனினும் அவரது அயரா முயற்சி என்றும் துணையாக நின்று உதவி புரியத் தவறவில்லை. சின்னஞ்சிறு பதவி ஒன்றைப் பெறுவதும், அதனைத் திறம்பட நடத்துவதும் அருமையாக இருக்க, வாய்ப்பு வசதி அற்ற ஏழ்மைக் குடியிலே, கல்வியறிவு மிகுதியும் அற்ற பெற்றோர்களுக்குப் பிறந்த ஆபிரகாம் உயரிய பதவியைப் பெற்று, சீரிய முறையிலே நடத்திக் காட்டியது அவருக்கே அமைந்திருந்த இடையறா முயற்சியால் தான்!

இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது.