உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணல் ஆபிரகாம்

73

அரசியல் வண்டி பிணக்கற்ற பெருவழியிலேதான் சென்று கொண்டிருக்கும் என்பது இல்லை. மேடு பள்ளங்களிலும் சேறு அளறுகளிலும் மாட்டிக் கொள்ள வேண்டி நேரிடலாம். இந்நிலை வருதல் அமெரிக்காவுக்கோ, ஆபிரகாம் லிங்கனுக்கோ விதி விலக்கு ஆகமுடியாது. ஆனால் இச்சமயங்களிலெல்லாம் லிங்கன் எவ்வளவு மதி நுட்பத்துடனும், பொறுப்புடனும் நடந்து கொண்டார் என்பதை முன்னர் அறிந்தோம். பொறுப் புடையவர்கள் 'தொட்டாற் சுருங்கி' போல் இருக்கக் கூடாது. அதாவது, எச்சிறு நிகழ்ச்சியையும் பெரிது பண்ணிக் கொண்டு மனத்தைத் துயரத்தில் ஆழ்த்திக் கொண்டோ, சிந்தனையைக் குழப்பிச் சிதைத்துக் கொண்டோ இருக்கக்கூடாது. கோட்பாட்டை ஆபிரகாம் சிக்கெனப் பிடித்தார்.

க்

அமெரிக்க அரசியல் தோழர்களாலும், அமைச்சர்களாலும், போர் வீரர்களாலும், சமுதாயத்தோராலும் எதிர் பாராத எதிர்ப்புகள் அவ்வப்போது தோன்றின.புயல், பூகம்பம் போலாகவே கிளர்ச்சிகள் தோன்றின; எரிமலை நெருப்பைக் கக்குவது போல் கக்கின.எனினும் அமைதியுடன் அடியடியாகத் தமக்கென வகுத்துக் கொண்ட பாதையிலே சென்று கொண்டி ருந்தார். அதனால் எட்டிப் பிடிக்க முடியாத பதவியையும் எட்டிப் பிடித்து, அழியா எழுத்தில் தம் பெயரை எழுதிக் கொண்டு விட்டார்.

முன்னேறும் துடிப்புடைய ஒருவனுக்கு எத்தகைய தொழில் கிடைத்தாலும் கவலை இல்லை. ஏதேனும் ஒரு தொழில் கிடைக்க வேண்டும் என்பது தான் அவன் கவலை. அது சிறியதா பெரியதா என்பதுபற்றி அக்கறை காட்டுவதே இல்லை. எத்தகைய சிறிய கிளை கிடைத்தாலும் அதனையே துணையாகக் கொண்டு குரங்கு தாவி விடுகின்றது அல்லவா! இது போலவே உந்தும் உணர்ச்சி உடையவர்கள் நொடிக்கு நொடி முன்னேறிக் கொண்டே போவர் என்பது உறுதியாம். இவ்வுறுதி ஆபிரகாம் வாழ்வில் மிக உறுதி ஆக்கப்படுவதை அறியலாம்.

-

பள்ளிசெல்வதற்கே முடியாதநிலைமை அப்படிப் போகும் பொழுதும் புத்தகமும் சிலேட்டுப் பலகையும் வாங்குவதற்கு வசதி ன்மை படிப்புக்குத் தடையாக இருக்கும் தந்தை - அரித்துத் தொலைக்கும் வறுமை - வயலிலும் காட்டிலும் வேலை செய்தே பிழைக்க வேண்டிய கடமை- இவற்றுக்கிடையே இருந்த ஆபிரகாம் எப்படி நூலறிவு பெற்றார்? சொல்லாற்றலால் வெற்றி காணும் கட்டடக்கலை பயிலும் நுண்ணறிவு பெற்றார்? போட்டியும்,