உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

பொறாமையும் மிக்க அரசியலிலே புகுந்து அழியா இடம் பெற்றார்? எல்லாம் அயரா உழைப்பினாலும், தொழிலில் சிறுமை பெருமை கருதாத உள்ளத்தினாலுமே அன்றோ!

வயலில் வேலை செய்தார்; விறகு வெட்டினார்; கூலிப் படகு நடத்தினார்; கடைச் சிப்பந்தியாக இருந்தார்; போர்ப்பணி புரிந்தார்; அஞ்சல் நிலையப் பணியாற்றினார்; நில அளவை யாளராக இருந்தார்; வழக்கறிஞராக மாறினார்; அமெரிக்கத் தலைவராகவும் துலங்கினார். தொழில் செய்யும் முறையிலே சிறுமை, பெருமை உண்டே அன்றி, தொழிலிலே சிறுமை, பெருமை இல்லை என்பதற்கு ஆபிரகாம் செய்துவந்த தொழில்களே சான்றாதற்குப் போதுமானவையாகும்.

சிலர் உள்ளத்திண்மை இன்றி, எளிய துயரையும் பொறுத்துக் கொள்ளமாட்டாதவர்களாய் அல்லலுறு கின்றனர். எளிதில் சோர்வடைவதும், முயற்சியை விட்டு விடுவதுமே அவர்கள் இயல்பு. இத்தகையவர்கள் “வாழ்க்கை இன்பச்சோலை" என்றே கனவு காண்பவர்கள்; இன்னும் சிலரோ, “வாழ்க்கை துன்பமே வடிவானது; இன்ப நிழல் சிறிதும் இல்லாதது" என்று அவலப் பாட்டுப் பாடுபவர்கள். ஆனால் உண்மை அறிவினர் "இன்பமும் துன்பமும் கலந்து வருவதே வாழ்வு" என்று தெளிவு கொண்ட வர்கள் அவர். இத்தகையர் இன்பத்தை விரும்பி அனுபவிப்பது போலத் துன்பத்தையும் விரும்பி அனுபவிக்க வேண்டும் என்று ஆவல் கொள்வர். "இன்பத்தை விரும்பும் ஒருவன் துன்பத்தை மட்டும் வெறுப்பது ஏன்?" என்று கைகொட்டிச் சிரிப்பர். "இடுக்கண் வருங்கால் நகவேண்டும் என்றும், "இடும்பைக்கு இடும்பை” ஆக்க வேண்டும் என்றும், ஓங்கிய குரலில் பேசுவர். இத்தகையரே வாழ்க்கையில் அடி சறுக்கி விழா இயல்பு கொண்டு முன்னேறிச் செல்பவர் ஆவர். இவ்வாறு அடி சறுக்காமல் சிங்கம்போல் செம்மாந்து சென்றார் லிங்கன் என்றால் புனைந்துரை அன்று; உண்மை உரை என்பது தெளிவே.

அயரா முயற்சியும், அழியா வெற்றியும் கொள்வோரிடையும் அறநெஞ்சத்தைக் காண்பது அரிதாகி விட்டது. அறநெஞ்சம் ல்லாத வாழ்வு எத்தகைய உயரிய வாழ்வாயினும் சரி 'தூ' வெனத் துப்பி ஒதுக்கத் தக்கதே. கல்வியோ, செல்வமோ வாழ்க்கை வசதிகளோ அனைத்தும் அறநெஞ்சத்தோடு பின்னிப் பிணைந்து மின்னிச் செல்வதே சிறப்புக்குரியதாம்.