உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ணல் ஆபிரகாம்

75

எல்லோர் கல்வியும் உலகுக்குப் பயன்படுகின்றதா? எல்லோர் செல்வமும் பயன்படுகின்றதா? அறநெஞ்சம் உடையவர் கல்வியும் செல்வமும் உலகெல்லாம் மணம் பரப்புவதை அறிகின்றோம். நாடு, மொழி, இனம் ஆகிய வேறுபாடுகள் அற்று அனைவருக்கும் பயன்படுவதைக் காண்கின்றோம்.

வள்ளுவன் தன்னை உலகினுக்குத் தரவில்லையா தமிழகம்? பாரியும் ஓரியும் காரியும் வாழ்ந்து கொடை மழையால் மக்களை வாழவைக்க வில்லையா? அறநெஞ்சம் மிக்க நாவுக்கரசரும், மணிமேகலையும், காந்தியடிகளும் உலக வாழ்வே தம் வாழ்வெனக் கொண்டு வாழவில்லையா? அறநெஞ்சம் இவர்களிடை அரும்பாது இருந்திருந்தால் பிறருக்காக வாழ்ந்திருப்பரோ?

பொன்னைக் கொடுப்பார் சிலருண்டு; பொருளைக் கொடுப்பார் சிலருண்டு; தன்னைக் கொடுப்பவரோ அரியர்! அரியரினும் அரியர். அவ்வாறு தம்மையே பிறருக்காக ஒப்படைத்த தொண்டர்களே உயரியவர்கள். இவர்கள் அறத்திலேயே ஊறிக் கிடக்கும் நெஞ்சம் உடையவர்கள் ஆவர். இத்தகையவர்களுள் ஒரு மாமணியாய்த் திகழ்ந்தார் ஆபிரகாம். அவர் அரசியலிலே சிக்குண்டும் அறநெஞ்சுடன் வாழ்ந்தாரே, அதனை எழுதிக் காட்ட எழுத்துப் போதா! பேசிக் காட்ட நா போதா!

  • மனத்துக்கண் மாசின்மையே அறம் என்று அறுதி யிட்டார் வள்ளுவர். உள்ளத்தூய்மை அமையும் போது உரையும், செயலும் தூய்மை அடைவது உறுதியே. தேன் குடத்திலிருந்து வழிவது தேனாக இருப்பதன்றி வேம்பாக இருக்குமோ? மாசின்மையால் கனிந்த உள்ளம் "குளிர் தருவாய், தரு நிழலாய்" அமைவது திண்ணமே. இத்தகைய அறவாழ்வு உடையவர்கள் இருப்பதால் தான் உலகம் நிலைத்திருக்கிறது. இன்றேல் மன்ணோடு மண்ணாகக் கலந்து என்றோ அழிந்திருக்கும்.

+"பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல் மண்புக்கு மாய்வது மன்”

என்னும் பொன்மொழி நினைவில் வைக்கத்தக்கதாம்.

++ அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் ஆகிய நான்கும் நெஞ்சில் புகவிட்டால் அறத்தின் வேரையே வெட்டி எறிந்து விடும். பிறர் வாழ்வதற்குப் பொறாத, பொறாமையும்,