உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

தன்னலமே குறியாம் ஆசையும், தன்னையும் கெடுத்துத் தன்னை நெருங்கிய வர்களையும் கெடுத்துத் தொலைக்கும் வெகுளியும், சுடுநெருப்பன்ன கொடுஞ்சொல்லும் பொருளாகக் கொண்டு வாழ்பவர் நன்னெஞ்சம் உடையர் ஆவரோ? "அறத்தான் வருவதே இன்பம்"; மற்றெல்லாம் துன்பம்! பெருந்துன்பம்!

இவற்றால், உன்னத நோக்கமும் உலையாமுயற்சியும், உயரிய பண்பும் உடையவர் உலகில் உயரிய இடம் ஒன்றைப் பெற்றுக் கொண்டு "இறவா வரம்" பெறுகின்றனர். இசைபட வாழும் பேறு எய்துகின்றனர். மற்றையோர் தங்கள் சிறுநோக்காலும், சிதறும் முயற்சியாலும், செம்மையில்லாப் பண்பாலும் உலகத்தே தமக்கென ஓரிடத்தைப் பெறாது, "நின்றான், இருந்தான், கிடந்தான், தன்கேள் அலற, புல் நுனிமேல் நீர்போல் நிலையாது சென்றான்" என்னும் அளவில் வாழ்ந்து வாளா மடிந்து போகின்றனர்.

"வரலாற்றுப் புகழ் வல்லவனுக்கே உண்டு" என்பது வழங்கு மொழி. ஆனால் வல்லவனாக மட்டும் இருந்தால் போதாது; நல்லவனாகவும் இருந்தால் தான் என்றும் ஏற்ற காணாப் புகழ் அடையமுடியும் என்பதை நிலை நிறுத்திக் காட்டியவர்கள் மிகச் சிலரே ஆவர். அவர்களுள் ஒருவராக இலங்கினார் ஆபிரகாம். அவர் வாழ்வும் வழியும் என்றும் பின்பற்றி நடக்கத் தக்கதாகும்.

ஆபிரகாம் இளவயதிலேயே சிலரைத் தமக்கு முன்னோடி யாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அவர்கள் சென்ற வழியிலே நடைபோட்டார். அரசியலுக்காக வாசிங்டனையும், அடிமை ஒழிப்புக்காக வில்பர் போர்ஸ், காரிசான் ஆகியவர்களையும், வழக்காடும் திறத்திற்காக பிரெக்கன் ரிட்ஜையும் தேர்ந்தெடுத்துக்

கொள்ளவில்லையா?

பேரொளியினால் வழி காட்டும் கலங்கரை விளக்கைக் கொண்டு கப்பல் தன் வழியைத் தீர்மானித்துக் கொள்ள வில்லையா? அதுபோல் உயரியவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டபின் ஐயமின்றி அவர்கள் வழியே அடியடியாக - கூடுமானால் விரைவாகக் கூடப் பின்பற்றிச் சென்ற ஆபிரகாமை நாம் நல்லதொரு வழிகாட்டியாகக் கொண்டு தொடர வேண்டும். அப்பொழுது

குறள் : 34

+ குறள் : 35.

++ குறள் 996.

குறள் 39