உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறவோர் அமைதிப் பணிகள்

85

ஆடுவதையும் காணுகிறோம். இந்நிலையில் அந்த நாகரிகத்தை நாகரிகம் என்பதா? அநாகரிகம் என்பதா?

மணிக்கு ஆயிரம் கி.மீ. விரைவில் பறப்பது தரக்குறைவான விரைவு, என்னும் அளவுக்கு அறிவியல் வளர்ந்துவிட்டது என்பதை எண்ணும் போதே என்ன தோன்றுகின்றது! அவ்விரைவு, ஆக்கத்திற்கு எவ்வளவு உதவ முடியுமோ, அவ்வளவு அழிவுக்கும் உதவ முடியுமே என்னும் அச்சமும் உண்டாகி விடுகின்றது. அவ்வச்சம் உண்டாவதும் இயற்கைதானே! 'அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அல்லவோ! "அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்" அல்லவா.

2 64

நாம் இன்று கண்ணாரக் காண்பதும் கேட்பதும் என்ன? ஒரு கண்டத்தில் இருந்து கொண்டே மறுகண்டத்தைத் தாக்கும் குண்டுகளைக் காணுகிறோம். அண்டம் விட்டு அண்டம் செல்லும் குண்டுகளைக் காணுகிறோம்; ஏவுகணைகளையும் காணுகிறோம்; இவற்றின் அழிபாட்டுக் கொடுமையை அரை நொடியளவு எண்ணினாலும் போதும், அருளாளர் உள்ளம் அமைதி கொள்ள முடியாது; 'எமக்கு என்ன?' என்று 'வாளா' விருக்கவும் இயலாது. அந்தோ அழிவே! :

கடற்கரையில் சில பிணங்கள் ஒதுங்கிக் கிடந்தன.ஒரு பிணத்தின் சட்டைப் பையில் இருந்த குறிப்பு ஒன்று சொல்கின்றது; "கொடுவாய்க் குண்டுக்கு ஆட்பட்டுத் துடித்துச் சாக நாங்கள் விரும்பவில்லை; ஆகவே குடும்பத்தோடு மகிழ்ந்து கடலிலே வீழ்ந்து நாங்களாகவே சாகின்றோம்."

"மூளை இல்லாமல் முப்பதிற்கு மேற்பட்ட குழந்தைகள் சப்பானில் பிறந்துள்ளன; இஃது இரண்டாம் உலகப்போரில் போடப்பெற்ற அணுக்குண்டின் விளைவாகும்" என்று செய்தித்தாள் சொல்கின்றது.

ஒரு கிலோ எடைக் கருமருந்தைக் கொண்டு பன்னூறு மெட்ரிக் டன் கல்லைப் பெயர்த்தெறிய முடிகின்றது. ஆனால், ‘நடுத்தரத்தில் கடைப்பட்ட ஓர் அணுக்குண்டில் இரண்டு மெட்ரிக் டன் கருமருந்தின் ஆற்றல் உள்ளதாம்! அது வீழ்ந்து வெடித்தால்...? 'சோதனை செய்யாதே, என்று உலகம் எல்லாம் வரிந்து கட்டிக்

1.1.2. குறள்: 428

,

க்