உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 32.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீதி சாரம்

இவர்க்கு இவை இல்லை

47. சீர்வளர் பயிர்செய் வோர்க்குத் தரித்திரம் இலை;செ பங்கள் ஏர்பெறச் செய்கு வோர்க்குப் பாதகம் இல்லை: இன்பாய்த் தேர்வுறு மௌனர்க் கில்லை கலகமும்; தெளிந்தி ருட்டிற்

பார்பெற விழித்துள் ளார்க்குப் பயங்களும் இல்லைத் தானே.

129

(அ - ள்) பயிர் செய்வோர் - உழவர்; செபம் - வழிபாடு; ஏர்பெற அழகுற; மௌனர் அமைதியாளர், அடக்கமுடைய துறவோர்; பார்பெறஉலகைக் கைப்பற்ற.

-

இனத்துடன் போர் செய்வார் இவர்

48. மறையவன் வேசி கோழி வயித்தியன் சுணங்கன் ஐவர் முறையுடன் தங்கள் சாதி கண்டிடின் முனிந்து சீறி நிறைபெறு கருமம் இன்றி நேயமோர் சிறிதும் இன்றிக்

குறைவறச் சண்டை செய்வர் அவரவர் குணங்க ளாமே.

(47)

(அ - ள்) மறையவன் - வேதியன்; சுணங்கன் - நாய்; முனிந்து சீறி - பகைத்துச் சினங்கொண்டு; கருமம் - காரியம்; நேயம்- - அன்பு.

நிலைதவறின் பெருமை கெடும்

49. கேசமும் உகிரும் பல்லும் கிளத்திய வேந்தும் தத்தம் வாசமே இகந்து பின்பு மறுத்துமோர் இடத்துச் செல்லில் நேசமே இன்றி யாரும் நிந்தைசொல் லிடுவார் போலப் பேசிய மாந்தர் தங்கள் நிலைவிடின் பெருமை போகும்.

(48)

(அ - ள்) கேசம் - மயிர்;உகிர் - நகம் கிளத்திய வேந்தும் புகழ்வாய்ந்த அரசரும்; வாசமே இகந்து இருப்பிடம் நீங்கி; மறுத்துமோர் இடம் - மற்றோர் இடத்தில் ; நேசம் -அன்பு; நிந்தை - பழி; நிலை -இருப்பிடம்.

அறஞ்செய்யார் பொருள் அழிவகை

50. ஊனமே எவருக் குஞ்செய் துறுபொருள் தேடி நல்ல தானமும் தவமும் இன்றித் தான்புசிப் பதுவும் இன்றி ஈனமாய்ப் புதைத்து வைத்தால் எரிமன்னன் சோரன் தண்ணீர் ஆனநால் வகையினாலும் அழிந்திடும் என்பர் மேலோர்.

(49)