64
இளங்குமரனார் தமிழ்வளம் - 32 ஓ
நேரத்து - வைகறையில்; ஈரத்து அலம்பல் இதம் தண்ணீரில் குளித்தல் நலம்.
நைபவர் ஆயினும் நேராய் ஒழுகவரும்
வைபவத் தோடவர்க்கு வாழ்வு.
(86)
நைபவர் - நலிபவர்; வைபவம் - சிறந்த விழாவோடு (87)
நொய்யள(வு) ஆயினும் நோய்செய்யும் மற்றெல்லாம்
நெய்தொழில் செய்யும் நலம்.
நொய்யளவு - சிறிதளவு; நோய் - துன்பம்; மற்று எல்லாம்-
பிற தொழில்கள் எல்லாம்.
நோய்செய்யா(து) இன்னுயிரைக் காத்தலே நோன்பாகும்
மாதவத்தோர் ஆயினும் மற்று.
நௌவிதனில் ஏறிஅயல் நாடெங்கும் சுற்றுதல்
எவ்வமில்பொன் தேடும் இயல்பு.
(88)
(89)
நௌவி -கப்பல்; எவ்வம்இல் - குற்றம் இல்லாத. (90)
பலபார்க்கப் பண்டிதன்; பாரா(து) உலகின்
முலைபார்த்(து) உழலுமவன் முண்டு.
-
பலபார்க்க பலவற்றை ஆராய்ந்து பார்க்க; உழலுமவன் - திரிபவன்; முண்டு - மூடன்.
பார்த்தொருவன் செய்யப் பழுத்துவரும்; பாராமல்
வேறொருவன் செய்ய விழும்.
(91)
பழுத்துவரும் - தேர்ச்சி முதிர்ந்து வரும்; விழும்-கெடும்.
பிறருனக்குச் செய்ய விரும்பாஅச் செய்கை
பிறருக்குச் செய்யிற் பிழை
பீடம் அழுந்தா(து) எழுசுவர் வீழும்போல்
பாடம் அழுந்தாப் படிப்பு.
(92)
(93)
-
பீடம் - அடித்தளம்; எழுசுவர் எழுப்பப்பட்ட சுவர்; அடிப்படை இல்லாப் படிப்பு வீழும்' என்க.
புதுமை உதிக்கும் பழமைஇறக் கப்பாராப் பழமையும் அற்று விடும்.
(94)